போகர் சப்தகாண்டம் 4051 - 4055 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 4051 - 4055 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4051. கண்டேனேமனோன்மணியாள் பொய்கைதன்னை மற்றெவரால் காணப்போமோ
தொண்டனென்னும் ஆழ்வார்கள் பொய்கையன்னில் தேற்றமுடன் காவலது பூண்டுநிற்பார்
வண்டுழலாள் மனோன்மணியாள் நிர்த்தஞ்செய்வாள் வசந்தமணிமண்டபத்தின் பொய்கைதன்னில்
தெண்டமுட னடியார்கள் கூட்டமெல்லாந் தெரிசிப்பார் மனோன்மணியை தெரிசிப்பாரே

விளக்கவுரை :


4052. பாரேதான் அடியேனுங்குளிகைகொண்டு பட்சமுடன் சீஷவர்க்கந்தன்னைக்கண்டேன்
நேரேதான் ஆசீர்மந் தன்னைச்சுற்றி நேர்மையுடன் காத்திருக்கும் ரிஷியார்பக்கல்
சீரேதான் குளிகையது பூண்டுகொண்டு சிறப்புடனே பொய்கைதனில் நடுமையத்தில்
கூரேதான் நீடாழி மண்டபத்தில் கொப்பெனவே இறங்கிவிட்டேன் பண்பாய்த்தானே

விளக்கவுரை :

[ads-post]

4053. பண்புடனே ரிஷிமுனிவர் என்னைக்கண்டு பதறியே ஓடிவந்துயாரென்றார்கள்
திண்பான காலாங்கி நாதர்தம்மை திடுக்கிட்டு மனந்தனிலே தான்நினைத்து
நண்பாக காலாங்கி சீடனென்றேன் நாதாக்கள் சித்தொளிவு நடுங்கினார்கள்
கண்பான மனோன்மணியைக் காணவென்று காசினியில் குளிகைகொண்டு வந்திட்டேனே

விளக்கவுரை :


4054. வந்திட்டேன் என்றதுமே ரிஷியார்தாமும் வணக்கமுடன் எந்தனுக்கு வாசீர்மித்து
தந்திட்டார் மனோன்மணியைக்காணவென்று தகமையுடன் இடமதுவும் காண்பித்தார்கள்
அந்தமுடன் எந்தனையும் அழைத்துக்கொண்டு வன்பான வாசீர்மம் தன்னின்முன்னே
சொந்தமுடன் என்னைநிறுஃத்தி வுளவுசொன்னார் சூட்சமுடன் தான்கண்டு திரும்பினேனே

விளக்கவுரை :


4055. திரும்பியே மனோன்மணியைக்காணவென்று சிலகாலமங்கிருந்து வுளவுகண்டேன்
அரும்பொன்மணி நவரத்தின வாசீர்மத்தில் அழகான மனோன்மணியாள் பீடம்கண்டேன்
சுரும்புடைய பூந்துடையாள் சொரூபங்கண்டேன் தோற்றமுடன் கண்ணிற்குத் தோற்றலாச்சு
கரும்பெனவும் தேன்மாரி பொழியக்கண்டேன் கைலங்கிரி போலிருக்கும் பொய்கையாமே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar