போகர் சப்தகாண்டம் 4126 - 4130 of 7000 பாடல்கள்
4126. பாரேதான் வடகோடியாழிதன்னில்
பாங்குடனே குளிகைகொண்டு யானுஞ்சென்றேன்
நேரேதான் குளிகைகொண்டு
செல்லும்போது நேர்மையுடன் ஆசீர்மமமொன்றுகண்டேன்
ஊரதுபோல் கடலாழிநடுமையத்தில்
ஓகோகோ தீவதுதான் கண்டேனப்பா
சேரேதான் குளிகையது
சென்றுயானும் சேர்ந்தேனே தீவுதனில் கிட்டினேனே
விளக்கவுரை :
4127. கிட்டவே தீவுதனில்
செல்லுமபோது கெடியான தேவதா மலையொன்றுண்டு
குட்டவே பாசிபோலிருந்ததப்பா
மூதுலகில் மலையென்று நினைத்துக்கொண்டேன்
வட்டமுள்ள பாறைதனை
சோதித்தேன்யான் வளமான பச்சையென்ற மலைதானப்பா
திட்டமுடன் கண்டறிந்தேன்
பச்சையப்பா திடமான பச்சைமலை பார்திட்டேனே
விளக்கவுரை :
[ads-post]
4128. பார்த்தேனே மலையினிட
மகிமைமெத்த பாருலகில் சித்தர்முனி கண்டதில்லை
தீர்த்தமுடன் மலைமீதில்
சுனைதானுண்டு திறமான பச்சையென்ற நிறத்தைப்போல
கார்த்துமே காவலுடன்
வெகுகோடிசித்தர் கதிகாணா மலைதனிலே யிருப்பாரங்கே
பூர்த்தியாய் அவர்களிடம்
சென்றேன்யானும் புகழாக வடிபணிந்து தொழுதிட்டேனே
விளக்கவுரை :
4129. தொழுதேனே
சித்தர்வர்க்கந்தன்னைக்கண்டேன் தோற்றமுடன் குளிகைகொண்டு பக்கல் சென்றேன்
பழுதுபடா மேனியது
பார்க்கும்போது பச்சையென்ற திருமேனி யென்னலாகும்
கழுமுடனே
யிமாப்பட்சியெல்லாமப்பா காணுகைக்குப் பச்சைநிறமென்னலாமே
விளக்கவுரை :
4130. என்னவே என்தேகம்பச்சையப்பா
எழிலான ஜலமெல்லாம் பச்சையப்பா
துன்னவே மண்டலமும்
பச்சையப்பா துறையான பூமிமுதல் பச்சையப்பா
பன்னவே பார்லோகம் பச்சையப்பா
பாங்கான விருட்சமுதல் பச்சையப்பா
சொன்னதொரு மார்க்கமெல்லாம்
பச்சையப்பா சுடரொளியை யென்சொல்வேன் போகர்தாமே
விளக்கவுரை :