போகர் சப்தகாண்டம் 4121 - 4125 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 4121 - 4125 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4121. துறையான துறைவழியே கண்டபோது துப்புறவாய் சுனகமெல்லாங் கைக்குள்ளாச்சு
மறைவான பொருளெல்லாம் கண்ணிற்றோற்றும் மகத்தான நிதிகளெல்லாம் எடுக்கலாகும்
திறைகடலில் நீராவிக்கப்பல் தன்னால் திறளான களஞ்சியத்தைக் காணலாகும்
குறையாமல் செல்வமது எந்நாளுந்தான் கொற்றவனே யுந்தனுக்கு வாய்க்கும்பாரே

விளக்கவுரை :


4122. வாய்க்குமே மகமேருபர்வதந்தான் வாகான குகையாவிப்பர்வதந்தான்
தீய்க்கவே தீவுங்காணலாகும் திறைகோடி கடல்தனை சுற்றலாகும்
வேய்ப்பான பதிதனிலே மகிமையெல்லாம் வேகமுடன் மரக்கலத்தால் காணலாகும்
காய்க்கவே சீனபதியுலகத்தார்க்கு சட்டமுடன் தானமைத்த நூலிதாமே

விளக்கவுரை :

[ads-post]

4123. நூலான போகரேழாயிரந்தான் நுணுக்கமுள்ள பொருளெல்லாம் இதிலேதோயும்
பாலான சாத்திரந்தான் சத்தகாண்டம் பாலகனே யிக்காண்டம் ஐந்தாம்காண்டம்
மேலான காண்டமிது யேழுக்குள்ளே மேதினியில் கருவிகரணாதியெல்லாம்
மாதான சத்தசாகரமடக்கம் மகத்தான போகர் பெருநூலாமே

விளக்கவுரை :


4124. பெருநூலாம் போகரேழாயிரந்தான் பெருக்கமுடன் பாடிவைத்தேன் சீனத்தார்க்கு
விருநூலாம் அடியேனுஞ் சொன்னமார்க்கம் விருப்பமுடன் அகஸ்தியரும் ஒருநூல்செய்தார்
குருநூல் காவியம் பன்னீராயிரந்தான் கும்பமுனி பாடிவைத்தார் காண்டமப்பா   
திருநூலாங் காண்டமது பனிரெண்டாகும் திறமான வாருயுறுவேதந்தானே

விளக்கவுரை :


4125. வேதமாம் யின்னமொரு மார்க்கங்கேளு விருப்பமுடன் புலிப்பாணி மஐந்தாநீயும்
நீதமுடன் குளிகையது பூண்டுகொண்டு நீதியுடன் சீனபதிவிட்டுயானும்  
போதமுடன் வடகோடி கானகத்தை பொங்கமுடன் திரும்பிவந்தேன் அடியேன்தானும்
காதமெனும் கடலாறுதன்னிலப்பா கவனமுடன் குளிகைகொண்டு சென்றேன்பாரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar