4116. தானான தனக்கோட்டி வடபாகத்தில் தாக்கான முத்தாழிதீவுமுண்டு
தேனான சித்தர்முனி
கண்டதில்லை தெவதா ரிஷிகளெல்லாம் காணுமாழி
பானான பராபரியாள்
வாசஞ்செய்யும் பாங்கான முத்துறையுந்தீவுமாச்சு
மானான மண்டபத்தில்
யாருங்காணார் மகத்தான முத்துரையுந் தீவுமாச்சே
விளக்கவுரை :
4117. ஆச்சப்பா தீவுவழி
செல்லும்போது வப்பனே கடல்தனிலே அடக்கமுண்டு
நீச்சுடைய
கடல்தனிலேபோகும்போது நீடான மலைப்பாறைக்குண்ணுமுண்டு
வீச்சுடனே நீராவி
மரக்கலந்தான் வீறுடனே யாழிதனில் செல்லும்போது
மாச்சலென்ற மலைவளத்தா
ரிடருண்டாகும் மகத்தான மரக்கலமும் உடைந்துபோமே
விளக்கவுரை :
[ads-post]
4118. போமேதான்
நீராவிக்கப்பல்தானும் பொங்கமுடன் கடல்தனிலே செல்லும்போது
நாமேதான்
கண்ணாடிக்கைபிடித்து நலமுடனே யாழிதம் பார்க்கும்போது
வேமேதான்
கண்ணாடிக்கைபிடித்து விருப்பமுடன் கப்பல்முனைத்தனிலிருந்து
தாமேதான் கண்ணாதன்னையப்பா
தாரிணியில் ஆழிதனைக் காணுவாயே
விளக்கவுரை :
4119. காணுகையில் உந்தனுக்குப்
புத்திமானே கடலிலுள்ள மர்மமெல்லாம் கண்ணிற்றோற்றும்
தோணுமே மலைப்பாறைக்
கல்களெல்லாம் தோற்றுமே யுந்தன்கண்ணாடியாலே
பூணவே வழிதடத்தைக்
கண்டுமல்லோ புகழான மலைப்பாறையொதுங்கியேதான்
நீணவே நெடுந்தூரஞ்
செல்லலாகும் நீராவிக் கண்ணாடிக் கப்பல்தானே
விளக்கவுரை :
4120. தானான நீராவிக்கப்பல்கொண்டு
தகமையுள்ள வாணிமுத்து யெடுக்கலாகும்
தேனான ஆணியென்ற
முத்தைத்தானும் தெளிவாகக் கடல்தனிலே எடுக்கலாகும்
கோனான குருசொன்ன
வாக்குதானும் குறையாமல் ஆழிதனில் நடத்தினாக்கால்
பானான பாதாளமுத்தையெல்லாம்
பாங்குடனே எடுப்பதற்கு துரையுமாச்சே
விளக்கவுரை :