போகர் சப்தகாண்டம் 4111 - 4115 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 4111 - 4115 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4111. இறங்கியே காலாங்கி நாதர்தம்மை யெழிலான சமாதிதனை தெரிசித்தேன்யான்
திறமான காலாங்கிநாதர்தானும் தீரமுடன் யான்வந்தசேதிகண்டு
வரமுடனே எந்தனுக்கு வசரீராக வாக்களித்தார் எந்தனது குருபரன்தான்
கரங்குவித்து முடிவணங்கி யடியேன்தானும் கர்த்தாவைத் தெண்டனிட்டுப் பணிந்திட்டேனே

விளக்கவுரை :


4112. பணிந்தேனே காலாங்கிநாயர்பாதம் பட்சமுடன் தெண்டனிட்டுப் பதியிற்சென்றேன்
அணியணியாய் சீனபதிமாண்பரெல்லாம் வன்புடனே எனைவந்துகண்டாரப்பா
துணிவுடனே கொண்டுவந்த முத்தையெல்லாம் துப்புறவே சீனத்தார்க்கறியச்சொல்லி
மணியான முத்துறையும் கடலையானும் மாண்பர்களே கண்டுவந்தேனென்றிட்டேனே

விளக்கவுரை :

[ads-post]

4113. இட்டேனே முத்திருக்கும் பதியுஞ்சொன்னேன் எழிலான திருச்சங்குக்கோட்டை சொன்னேன்
வட்டமுடன் திருசங்குகோட்டைபக்கல் வாகான கிருஷ்ணவாசீர்மஞ்சொன்னேன்
பட்டணங்கள் சீனபதிமார்க்கமெல்லாம் பட்சமுடன் யான்வந்து சேதிகண்டு
திட்டமுடன் மாண்பரெல்லாம் எந்தனுக்கு தீரமுடன் ஆசீர்மஞ்சொன்னார்பாரே

விளக்கவுரை :


4114. பார்க்கவே எந்தனுக்கு பணிந்துமேதான் பட்சமுடன் முத்திருக்குந் தீவுதன்னை
தீர்க்கமுடன் போகவென்று வடையாளங்கள் தீரமுடன் கேட்டார்கள் மாண்பரெல்லாம்
ஏர்க்கவே யாழியென்னுங் கடலிலப்பா எழிலான முத்தெடுக்கப் போகாதப்பா
மார்க்கமுடன் குளிகையது பூண்டுகொண்டு மகத்தான முத்தெடுக்க வேண்டும்பாரே

விளக்கவுரை :


4115. பாரேதான் குளிகையது யில்லாவிட்டால் பாங்கான நீராவிக்கப்பல் வேண்டும்
நேரேதான் நீராவிக்கப்பல்தன்னில் நேர்மையுடன் நிர்மித்து நீங்களெல்லாம்
ஊரேதான் நீராவிக்கப்பல்கொண்டு வுத்தமனே முத்தாழிக்காணவேண்டும்
சேரேதான் ஆழிதடம்நடக்கும்போது சீரான யுத்தியது வேண்டுந்தானே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar