போகர் சப்தகாண்டம் 4106 - 4110 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 4106 - 4110 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4106. மதித்துமே எந்தனையும் கேட்டபோது மகத்தான காலாங்கிச்சீடனென்றே
துதிப்புடனே எந்தனையுமாசீர்மித்து துப்புறவாய் பட்சமதுகொண்டு என்னை
கதிரோன்கள் காணாத ஆழிக்கோட்டை கருவுடனே யுளவறிந்து குளிகைகொண்டு
விதிப்படியே விட்டகுறை யிருந்ததாலே விருப்பமுடன் உந்தனையும் காணலாச்சே

விளக்கவுரை :


4107. காணுதற்கு காலம்வந்து சேர்ந்துதென்று காலாங்கி நாதரதுகிருபையாலே   
வேணபடி பலாபலத்தின் மகிமையாலே வினையமுடன் கோட்டையது கண்டாயென்று
கோணாமல் மனதுவந்து என்னைப்பார்த்து கொற்றவனே காலாங்கிசீடர்யென்று
நீணவே பிரிங்கிமகாரிஷியார்தாமும் நீட்சியுடன் சந்தோஷம்கொண்டார்தாமே

விளக்கவுரை :

[ads-post]

4108. தாமான பிரிங்கி மகாரிஷியைத்தானும் தகமையுடன் கண்டுவந்து வுறவுபேசி
ஆமான மானதொரு வாணிமுத்து அலைகடலில் விளைகின்ற வதிதங்கேட்டேன்
நாமான வார்த்தைக்கி வன்பர்தாமும் நாதரதுகாலாங்கி கிருபையாலே
ஏமாந்து முத்துரையும் வளமைசொன்னார் எழிலான முத்துவளங்கண்டிட்டேனே

விளக்கவுரை :


4109. கண்டேனே முத்துறையும் நாடும்கண்டேன் கருவான ஆணிமுத்து தானுங்கண்டேன்
கொண்டேனே வெகுதூரங் குளிகைகொண்டு கொப்பெனவே முத்துறையும் பதியுங்கண்டேன்
விண்டிட்ட குளிகையது பலத்தினாலே வீரான ஆழிவரை சுத்திகண்டேன்
உண்டதொரு குண்ணளவு முத்துகண்டேன் வுகமையுள்ள சிப்பிமுத்து கண்டேன்பாரே

விளக்கவுரை :


4110. பார்த்தேனே மலைமலையாய் முத்துதன்னை பாங்கான ஆழிக்குள் அனேகங்கண்டேன்
நேர்த்தியஉடன் முத்தெடுக்கும் பதமுங்கண்டேன் நேர்மையுடன் உளவுதனை யறிந்துகொண்டு
சேர்த்துமே ஆணிமுத்து கையிலேந்தி சிறப்புடனே சீனபதியானுஞ்சென்றேன்
பூர்த்தியுடன் குளிகைதனை விட்டிறங்கிப் புகழாக சமாதியிட மிறங்கினேனே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar