4101. காணவே கலியுகத்துமுன்னேயப்பா
காலாங்கிநாதர் சொன்னதிருவாக்குத்தான்
தோணவே யெந்தனுக்கு
இப்போதல்லோ தோற்றமுஐடன் எந்தனுக்குக்காணலாச்சு
வாணர்முதல் சொன்னதொரு
கோர்வையெல்லாம் வளமாக இவ்வண்ணஞ் சொன்னதில்லை
பூணவே குளிகையது
பூண்டுகொண்டு புகழான கோட்டைதனை பார்த்திட்டேனே
விளக்கவுரை :
4102. பார்த்தேனே பிரிங்கி
மகாரிஷியார்தன்னை பட்சமுடன் அடியேனும் அஞ்சலித்து
தீர்த்தமுடன் சோடசோபாரத்தோடு
திக்காதி பிரிங்கிரிஷியார்முன்னே
சேர்த்துமே கரங்குவித்து
சிரமேல்வைத்து சிறப்புடனே தான்பணிந்து வஞ்சலித்தேன்
பூர்த்தியுடன் மனதுவந்து
சாமிபாதம் பொன்னடியை மறுக்காலும் தொழுதிட்டேனே
விளக்கவுரை :
[ads-post]
4103. தொழுதுமே முக்காலும்
பணிந்துமேதான் தொல்லுலகையான் மறந்துதுதித்தேனப்பா
பழுதுபடாத திருமேனி
க்காவலாரே பாருலகில் பள்ளிகொண்ட நாயனாரை
முழுதுமே யாழியது
கோட்டைசுத்தி மோனமுடன் குளிகைகொண்டு நிற்கும்போது
வழுவாக யாசீர்மம்
அங்கேகண்டேன் வண்மையுள்ள கிருஷ்ணராசீர்மந்தானே
விளக்கவுரை :
4104. தானான துவாரகையாம்
புருடனப்பா தாக்கான கிருஷ்ணரவராசீர்மந்தான்
தேனான
திருச்சங்குகோட்டைக்குள்ளே தெரிசித்தேன் முத்தினாசீர்மம்பின்னால்
வானான பிரிங்கி
மகரிஷியார்பக்கம் வகுப்பான வாணிமுத்துக்கோட்டையோரம்
மானான மகதேவன் ஆசீர்மந்தான்
வையகத்தில் பார்தவர்கள் இல்லைதானே
விளக்கவுரை :
4105. இல்லையே ஒருவருந்தான்
கண்டதில்லை எழிலான பிரிங்கிரிஷி கோட்டைகண்டேன்
புல்லவே யடியேனைப்
பார்த்தபோது புகழான சிறுபாலா வென்றுசொல்லி
வல்லதொரு காலாங்கி சீடபாலா
வாகான போகரென்று தானழைத்து
சல்லாபங் கொண்டல்லோ
என்னைப்பார்த்து சட்டமுடன் யாரென்று மதிப்பிட்டாரே
விளக்கவுரை :