போகர் சப்தகாண்டம் 3996 - 4000 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3996. இல்லையே நாதாக்கள் சித்துதாமும் எழிலுடனே எல்லவரும் மாண்டாரப்பா
தொல்லையெனும் பிறவியது யற்றுப்போச்சு தோற்றமில்லை வண்டசராசரங்களெல்லாம்
வல்லதொரு வாத்மாவும் காணப்போகா மகத்தான லோகத்து மார்க்கமப்பா
சொல்லவென்றால் நாவில்லைப் பாவுமில்லை தொல்லுலகை மறந்தவனே சித்தனாமே

விளக்கவுரை :


3997. சித்தனாய்ப் பிறந்துமே பாலன்தானும் சிறப்புடனே காலாங்கி கிருபைதன்னால்
சுத்தமுடன் கிழக்கு தென்கிழக்குதானும் சஊட்சமுடன் தென்மேற்கு தெற்குதானும்
பத்தியுடன் மேற்குவடமேற்குதானும் பாங்கான வடகிழக்குதானும்
வெத்தியுடன் சுத்திவந்தேன் குளிகைதன்னால் வேதாந்தத்தாயினது ஒளிகண்டேனே

விளக்கவுரை :

[ads-post]

3998. கண்டதொரு குளிகைதன்னால் கைலையெல்லாங் காசினியோர் தான்புகழசுத்திவந்தேன்
அண்டமுடன் அதிசயங்கள் எல்லாம்பார்த்து வப்பனே காலாங்கி கடாட்சத்தாலே
விண்டிடவே லோகாதிவதிசயங்கள் விருப்பமுடன் வாடிவைத்தேன் சத்தகாண்டம்
சண்டமாருதம் போல வேழாயிரந்தான் சாற்றினேன் லோகத்து மாண்பருக்கே

விளக்கவுரை :


3999. மாண்பான பெருநூலேழாயிரந்தான் மகத்தான நூலிதுதான் நாலாங்காண்டம்
காண்பான சத்தகாண்டந்தன்னிலேதான் கருவிகரணாதியெல்லாம் திரட்டிவைத்தேன்
நீண்பான காண்டமது ஏழுக்குள்ளே நினைத்ததொரு பொருள்களெல்லாங் காணலாகும்
தாண்பான சீனபதி யுலக்தார்க்கு தகமையுடன் செப்பினதோர் நூலிதாமே

விளக்கவுரை :


4000. நூலான நூலிதுதான் நாலாங்காண்டம் நுணுக்கமுடன் பாடிவைத்த சத்தகாண்டம்
பாலான நூலதுபோல் யாருஞ்சொல்லார் பாலகனே வாயிரத்துக்கொருகாண்டந்தான்
சேலான காண்டமது யேழுமாகும் சிறப்பான காவியமேழாயிரந்தான்
மாலான குருநூலாம் பொருநூலாகும் மகத்தான காண்டமது நான்குமுற்றே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3991 - 3995 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3991. இட்டாரே சுந்தரானந்தர்தாமும் எழிலாகச் சமாதிக்குச் செல்லவென்று
திட்டமுடன் மறுபடியுஞ் சமாதிக்கேக தீரமுடன் சீஷருக்கு விடையுஞ்சொல்லி
சட்டமுடன் சமாதிக்கு போரேனப்பா தாரணியில் சதாகாலம் நீங்களெல்லாம்
கிட்டிருந்து நான்வருகுங்காலமட்டும் கிருபையுடன் எதிர்பார்த்து நிற்பீர்தாமே

விளக்கவுரை :


3992. நிற்பீரே சிலகாலஞ் சமாதிபக்கல் நீடூழிகாலம்வரை முடிவுமட்டும்
அற்பமென்ற வாழ்வதனை மெய்யென்றெண்ணி  வவனியிலே மதிமயங்கி நிற்கவேண்டாம்
சொற்படியே சமாதிவிட்டு வருவேனானால் சுந்தரனே எந்நாளும் துதித்துக்கொள்ளும்
அற்பசுக தேகமது வழிந்துபோனால் ஆண்டவன்முன் கடைசிவரைக் காணலாமே

விளக்கவுரை :

[ads-post]

3993. காணலாம் வுலகமது முடிவுதன்னில் கைலாசநாதரிடம் நிற்பேன்யானும்
தோணவே எந்தனையுங் காணலாகும் தொல்லுலகு முடிவுவரும் நாளிலப்பா
வேணபடி நீதிமனுமுறைகள்யாவும் விருப்பமுடன் தானடக்கும் தேவர்பக்கல்
நீணவே சீஷவர்க்கமனைத்துமேதான் நீடூழிமுடிவுதனில் காணலாமே

விளக்கவுரை :


3994. அமமெதான் வுலகுதனில் இருந்துமென்ன வப்பனே தேகமதை மறந்துவிட்டேன்
நாமேதான் பாசமதைத் துறந்துவிட்டேன் நாட்டினிலே நாதாக்களாசைவிட்டேன்
போமேதான் வுலகத்திலிருந்தாலுந்தான் பொன்னுலகும் எப்போதும் காணியாகும்
தாமேதான் தேகமது பொய்யேவாழ்வு சதாநித்தம் மோட்சமென்ற வீடுதானே

விளக்கவுரை :


3995. தானான லோகமதில் எல்லாம்பொய்யே சட்டமுடன் இருந்தவர்கள் யாருமில்லை
கோனான குருசொன்ன நூலும்பொய்யே குவலயமுமொரு காலமழிந்துபோகும்
தேனான சத்தசாகரமும்பா திறைமேடுவரை காணாதாகிப்போகும்
பானான வுலகமது வழிந்துபோகும் பாருலகைக் கண்டவர்களில்லைதானே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3986 - 3990 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3986. தானேகேள் சித்துவரும் நாளுமாச்சு தாரிணியில் வெகுகோடி மகிமைமெத்த
மானேகேள் சொரூபமென்ற சித்துதாமும் மகத்தான நவகோடிரிஷிகள்முன்னே
கானமுடன் சமாதிவிட்டு வெளியேவந்தார் கைலாயமேருகிரி சொரூபம்போலே
பானமிர்தம் வுண்டுமல்லோ பாரின்மீது பட்சமுடன் சித்தொளியைக் கண்டிட்டீரே

விளக்கவுரை :


3987. கண்டவுடன் சீஷவர்க்க மொன்றாய்க்கூடி கருத்துடனே வஞ்சலிகள் மிகவுஞ்செய்து
தெண்டமுடன் சாஷ்டாங்கம் மிகவும்பூண்டு தேற்றமுடன் ஞானோபதேசம்பெற்று
பண்டுடனே நவகனியும் அமுர்தம்தானும் பட்சமுடன் சித்துவுக்கு கொண்டுசென்று
விண்டதொரு வுபதேசம் பெற்றுக்கொண்டு வுத்தமர்கள் தாமிருந்தார் உண்மைபாரே

விளக்கவுரை :

[ads-post]

3988. உண்மையாய் இப்படிதானிருக்கும்போது ஓகோகோ நாதாந்த சித்துதாமும்
வண்மையுடன் வையகத்தில் வந்துமல்லோ மககோடி வற்புதங்கள் செய்தார்பாரு
தண்மையாய் தானுரைத்த வாக்குயாவும் தாரிணயில் நிறைவேறிப்போச்சுதல்லோ
நன்மைபெற சீஷவர்க்கங் காணலாச்சு நாடனைத்தும் சுந்தரனார் கீர்த்தியுண்டோ

விளக்கவுரை :


3989. உண்டான கீர்த்தியது மிகவுமாகி வுண்மையுடன் கிரியைமுதல் வசரீர்தானும்
தொண்டர்கட்குத் தாமுரைத்த வாக்குபோல தொல்லுலகில் வதிசயங்கள் மிகவுமாகி
மண்டலத்தில் நாதாக்கள் சித்துதாமும் மதித்தாரே சுந்தரரை மதித்தார்பாரு
கண்டமுடி மாண்பரெல்லாம் தலைகுனிந்து கைலாசசுந்தரரை துதித்தார்பாரே

விளக்கவுரை :


3990. பாரேதான் யின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் பண்பான சுந்தரானந்தர்தானும்
நேரேதான் நெடுங்காலம் வையகத்தில் நேர்மையுடன் தாமிருந்தார் சீஷரோடு
சேரேதான் சிலகாலஞ் சென்றபின்பு சிறப்புடனே பூலோக வாழ்வுதன்னை
கூரேதான் பொய்யென்று மனதிலெண்ணி கொப்பெனவே சமாதிசெல்வேன் என்றிட்டாரே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3981 - 3985 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3981. நிற்கவே சுந்தரானந்தர்தாமும் நெடிதான வசரீரிவாக்குசொல்வார்
விற்பனமாங்கொண்டதொரு சீஷர்தாமும் விண்ணுலகில் எல்லவருங்கேட்டிருங்கள்
சொற்படியே தான்நடக்கும் சுந்தரன்சொல் தொல்லுலகில் பொய்யாது மெய்யேயாகும்
கற்புதைத்த பாறையது வெடிக்கும்போது கைலாச சுந்தரரும் வருவன்தானே

விளக்கவுரை :


3982. தானான சுந்தரரும் வருகும்போது தாரிணியில் வெகுகோடி வதிசயங்கள்
பானான பராபரியும் முன்னேநிற்பாள் பாருலகந்தத்தளிக்கும் ஜோதிகாணும்
மானான வையகங்களிருண்டுபோகும் மகத்தான நாதாக்கள் நடுங்குவார்கள்
கூனான மொண்டிசப்பானியெல்லாம் குரைநீங்கி பிணிநீங்கி யெதிர்நிற்பாரே

விளக்கவுரை :

[ads-post]

3983. எதிரான சூரியனும் மங்கிநிற்பான் யெழுகடலுந்திசைமாறி பொங்கிநிற்கும்
சதிரான நாலுயுக வதிசயங்கள் சார்புடனே எக்காலுங் காணலாகும்
மதிபோன்ற சந்திரனும் எதிரேநிற்பான் மாசற்ற வருந்துதியும் நடுங்கும்பாரு
துதியான வஞ்சலிகள் மிகவே செய்வார் தொல்லுலகந் தத்தளிக்கக் காணலாமே

விளக்கவுரை :


3984. காணலாங் கைலாசமேருதானும் கண்ணுக்குத் தோற்றுமே கடினமில்லை
வேணபடி வுபசாரமிகநடக்கும் மேதினியில் சுந்தரனார் வாக்குபொய்யா
தோணவே யித்தியாதி வதிசயங்கள் தொல்லுலகில் தானடக்கும் சத்தியசத்தியம்
நீணவே எந்தனது சமாதிபாறை நெடியதொரு வதிசயங்கள் யின்னங்கேளே

விளக்கவுரை :


3985. கேளப்பா யான்வருகுங் காலந்தன்னில் கெனிதமுடன் பாறையதுமீதிலப்பா
நாளப்பா வருகுநாலெழுதலாகும் நாதாக்கள் புத்தியுள்ளோர் காணுவீர்கள்
ஆளப்பா வாசகத்தை கண்டபோது வப்பனே சமாதியுள் சிலம்பினோசை  
வீளப்பா செவிதனிலே கேட்கும்பாரு விட்டகுறை யிருந்தோர்க்கு லபிக்குந்தானே

விளக்கவுரை :


Powered by Blogger.