போகர் சப்தகாண்டம் 3991 - 3995 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 3991 - 3995 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3991. இட்டாரே சுந்தரானந்தர்தாமும் எழிலாகச் சமாதிக்குச் செல்லவென்று
திட்டமுடன் மறுபடியுஞ் சமாதிக்கேக தீரமுடன் சீஷருக்கு விடையுஞ்சொல்லி
சட்டமுடன் சமாதிக்கு போரேனப்பா தாரணியில் சதாகாலம் நீங்களெல்லாம்
கிட்டிருந்து நான்வருகுங்காலமட்டும் கிருபையுடன் எதிர்பார்த்து நிற்பீர்தாமே

விளக்கவுரை :


3992. நிற்பீரே சிலகாலஞ் சமாதிபக்கல் நீடூழிகாலம்வரை முடிவுமட்டும்
அற்பமென்ற வாழ்வதனை மெய்யென்றெண்ணி  வவனியிலே மதிமயங்கி நிற்கவேண்டாம்
சொற்படியே சமாதிவிட்டு வருவேனானால் சுந்தரனே எந்நாளும் துதித்துக்கொள்ளும்
அற்பசுக தேகமது வழிந்துபோனால் ஆண்டவன்முன் கடைசிவரைக் காணலாமே

விளக்கவுரை :

[ads-post]

3993. காணலாம் வுலகமது முடிவுதன்னில் கைலாசநாதரிடம் நிற்பேன்யானும்
தோணவே எந்தனையுங் காணலாகும் தொல்லுலகு முடிவுவரும் நாளிலப்பா
வேணபடி நீதிமனுமுறைகள்யாவும் விருப்பமுடன் தானடக்கும் தேவர்பக்கல்
நீணவே சீஷவர்க்கமனைத்துமேதான் நீடூழிமுடிவுதனில் காணலாமே

விளக்கவுரை :


3994. அமமெதான் வுலகுதனில் இருந்துமென்ன வப்பனே தேகமதை மறந்துவிட்டேன்
நாமேதான் பாசமதைத் துறந்துவிட்டேன் நாட்டினிலே நாதாக்களாசைவிட்டேன்
போமேதான் வுலகத்திலிருந்தாலுந்தான் பொன்னுலகும் எப்போதும் காணியாகும்
தாமேதான் தேகமது பொய்யேவாழ்வு சதாநித்தம் மோட்சமென்ற வீடுதானே

விளக்கவுரை :


3995. தானான லோகமதில் எல்லாம்பொய்யே சட்டமுடன் இருந்தவர்கள் யாருமில்லை
கோனான குருசொன்ன நூலும்பொய்யே குவலயமுமொரு காலமழிந்துபோகும்
தேனான சத்தசாகரமும்பா திறைமேடுவரை காணாதாகிப்போகும்
பானான வுலகமது வழிந்துபோகும் பாருலகைக் கண்டவர்களில்லைதானே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar