3986. தானேகேள் சித்துவரும்
நாளுமாச்சு தாரிணியில் வெகுகோடி மகிமைமெத்த
மானேகேள் சொரூபமென்ற
சித்துதாமும் மகத்தான நவகோடிரிஷிகள்முன்னே
கானமுடன் சமாதிவிட்டு
வெளியேவந்தார் கைலாயமேருகிரி சொரூபம்போலே
பானமிர்தம் வுண்டுமல்லோ
பாரின்மீது பட்சமுடன் சித்தொளியைக் கண்டிட்டீரே
விளக்கவுரை :
3987. கண்டவுடன் சீஷவர்க்க
மொன்றாய்க்கூடி கருத்துடனே வஞ்சலிகள் மிகவுஞ்செய்து
தெண்டமுடன் சாஷ்டாங்கம்
மிகவும்பூண்டு தேற்றமுடன் ஞானோபதேசம்பெற்று
பண்டுடனே நவகனியும்
அமுர்தம்தானும் பட்சமுடன் சித்துவுக்கு கொண்டுசென்று
விண்டதொரு வுபதேசம்
பெற்றுக்கொண்டு வுத்தமர்கள் தாமிருந்தார் உண்மைபாரே
விளக்கவுரை :
[ads-post]
3988. உண்மையாய்
இப்படிதானிருக்கும்போது ஓகோகோ நாதாந்த சித்துதாமும்
வண்மையுடன் வையகத்தில்
வந்துமல்லோ மககோடி வற்புதங்கள் செய்தார்பாரு
தண்மையாய் தானுரைத்த
வாக்குயாவும் தாரிணயில் நிறைவேறிப்போச்சுதல்லோ
நன்மைபெற சீஷவர்க்கங்
காணலாச்சு நாடனைத்தும் சுந்தரனார் கீர்த்தியுண்டோ
விளக்கவுரை :
3989. உண்டான கீர்த்தியது
மிகவுமாகி வுண்மையுடன் கிரியைமுதல் வசரீர்தானும்
தொண்டர்கட்குத் தாமுரைத்த
வாக்குபோல தொல்லுலகில் வதிசயங்கள் மிகவுமாகி
மண்டலத்தில் நாதாக்கள்
சித்துதாமும் மதித்தாரே சுந்தரரை மதித்தார்பாரு
கண்டமுடி மாண்பரெல்லாம்
தலைகுனிந்து கைலாசசுந்தரரை துதித்தார்பாரே
விளக்கவுரை :
3990. பாரேதான் யின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் பண்பான சுந்தரானந்தர்தானும்
நேரேதான் நெடுங்காலம்
வையகத்தில் நேர்மையுடன் தாமிருந்தார் சீஷரோடு
சேரேதான் சிலகாலஞ்
சென்றபின்பு சிறப்புடனே பூலோக வாழ்வுதன்னை
கூரேதான் பொய்யென்று
மனதிலெண்ணி கொப்பெனவே சமாதிசெல்வேன் என்றிட்டாரே
விளக்கவுரை :