3981. நிற்கவே சுந்தரானந்தர்தாமும்
நெடிதான வசரீரிவாக்குசொல்வார்
விற்பனமாங்கொண்டதொரு
சீஷர்தாமும் விண்ணுலகில் எல்லவருங்கேட்டிருங்கள்
சொற்படியே தான்நடக்கும்
சுந்தரன்சொல் தொல்லுலகில் பொய்யாது மெய்யேயாகும்
கற்புதைத்த பாறையது
வெடிக்கும்போது கைலாச சுந்தரரும் வருவன்தானே
விளக்கவுரை :
3982. தானான சுந்தரரும் வருகும்போது தாரிணியில் வெகுகோடி வதிசயங்கள்
பானான பராபரியும்
முன்னேநிற்பாள் பாருலகந்தத்தளிக்கும் ஜோதிகாணும்
மானான வையகங்களிருண்டுபோகும்
மகத்தான நாதாக்கள் நடுங்குவார்கள்
கூனான மொண்டிசப்பானியெல்லாம்
குரைநீங்கி பிணிநீங்கி யெதிர்நிற்பாரே
விளக்கவுரை :
[ads-post]
3983. எதிரான சூரியனும்
மங்கிநிற்பான் யெழுகடலுந்திசைமாறி பொங்கிநிற்கும்
சதிரான நாலுயுக வதிசயங்கள்
சார்புடனே எக்காலுங் காணலாகும்
மதிபோன்ற சந்திரனும்
எதிரேநிற்பான் மாசற்ற வருந்துதியும் நடுங்கும்பாரு
துதியான வஞ்சலிகள் மிகவே
செய்வார் தொல்லுலகந் தத்தளிக்கக் காணலாமே
விளக்கவுரை :
3984. காணலாங் கைலாசமேருதானும்
கண்ணுக்குத் தோற்றுமே கடினமில்லை
வேணபடி வுபசாரமிகநடக்கும்
மேதினியில் சுந்தரனார் வாக்குபொய்யா
தோணவே யித்தியாதி வதிசயங்கள்
தொல்லுலகில் தானடக்கும் சத்தியசத்தியம்
நீணவே எந்தனது சமாதிபாறை
நெடியதொரு வதிசயங்கள் யின்னங்கேளே
விளக்கவுரை :
3985. கேளப்பா யான்வருகுங்
காலந்தன்னில் கெனிதமுடன் பாறையதுமீதிலப்பா
நாளப்பா வருகுநாலெழுதலாகும்
நாதாக்கள் புத்தியுள்ளோர் காணுவீர்கள்
ஆளப்பா வாசகத்தை கண்டபோது
வப்பனே சமாதியுள் சிலம்பினோசை
வீளப்பா செவிதனிலே
கேட்கும்பாரு விட்டகுறை யிருந்தோர்க்கு லபிக்குந்தானே
விளக்கவுரை :