3976. பொய்யான வுலகத்தில் மாந்தரப்பா
பொங்கமுடன் கருமிகளு மெத்தவுண்டு
மெய்யாக வவர்களிடம்
வாய்பேசாதே வேதாந்த நுட்பமதைக் காட்டவேண்டாம்
துய்யதொரு காயாதிகற்பந்தன்னை
சூட்சத்து துறையதனைக் கூறவேண்டாம்
வையவே வுறவுகண்டு
விடையுங்கேட்பார் பகராதே ஒருயக்காலும் மகிழ்ந்திடாதே
விளக்கவுரை :
3977. மகிழவே யுந்தனுக்கு
யிதவுசொல்லி மாராட்டமாகவல்லோ கும்பல்கூடி
நெகிழவே ஞானத்துக்
குறுதிகேட்டார் நெடிதான பாலமுர்த போதையுண்டு
மகிழவே தடுமாட்ட மிகவேகூறி
தருக்கமது செய்துமல்லோ கருவிகேட்பார்
அகிழவே கருவதனால்
உன்னைக்கொல்ல வப்பனே கபடுதந்திரஞ் செய்வார்பாரே
விளக்கவுரை :
[ads-post]
3978. பாரேதான் முழுமக்கள்
கருமியோடு பகராதே வுன்னுக்குள் மருமவித்தை
தீரமுடன் சிவயோக
நிலையிற்சென்று தீர்க்கமுடன் சதாநித்தம் பருவமாகி
நேரேதான் தீவழியை
விட்டுநீங்கி நேர்மையுடன் நல்வழிக்கு யாளதாகி
கூரேதான் குவலயத்தில்
அடக்கங்கொண்டு கொற்றவனே வாழ்குவது புத்தியாமே
விளக்கவுரை :
3979. புத்தியாம் இன்னம்வெகு
மார்க்கஞ்சொல்வேன் புகழான கண்ணிமையே புகலக்கேளும்
சத்தியத்துக் கொருநாளும்
குறைவராது தாரிணியில் நீயுமொரு சித்தனாவாய்
வெத்தியுண்டு
விசுவாசமருளுமுண்டு வேதாந்தப் பெருங்கடலை வெல்லலாகும்
எத்திசையும் உந்தனையே
புகழ்வார்பாரு எழிலான சீஷவர்க்க முதலவனாமே
விளக்கவுரை :
3980. ஆமேதான் அறிவுள்ள டமறானந்தர்
வவனியிலே நீயுமொரு புத்திவானாய்
தாமேதான்
யான்வருங்காலமட்டும் தன்மையுடன் சமாதியிட பக்கல்நின்று
நாமேதான் சொன்னபடி
விதியின்மார்க்கம் நாட்டமுடன் தானிருந்துபத்திகொண்டு
போமேதான்
வீண்காலங்கழியாமற்றான் பொங்கமுடன் சமாதியிடம் நிற்பீர்தாமே
விளக்கவுரை :