போகர் சப்தகாண்டம் 3971 - 3975 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 3971 - 3975 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3971. தானான மண்டபந்தான் லட்சங்காலாம் தாக்கான வாய்க்கால் நடுமையத்தில்
கோனான எனதையர் காலாங்கிநாதர் கொற்றவனார் சொற்படிக்கிக் கண்டேன்யானும்
தேனான மனோன்மணியாள் கடாட்சத்தாலே தேசமெல்லாஞ் சுத்திவந்த சொரூபசித்து
வானான வையகத்திலிருந்த சித்து வளமுடனே காலாங்கி யென்னும்பாரே
விளக்கவுரை :


3972. பாரான சுந்தரானந்தசித்து பெருமையுடன் வுலகுதனில் வாழ்ந்தசித்து
சீரான சுந்தராநாதர்தாமும் சிறப்புடனே சமாதிக்கு செல்லவெண்ணி
கூரான சீஷவர்க்கக்கூட்டத்தோடு கொடுமுடி கைலாசர்போலேதானும்
சேரான வருங்கடலைத் தேடியல்லோ சேனையுடன் வந்தாரே சித்துகாணே

விளக்கவுரை :

[ads-post]

3973. சித்தான சொரூபமென்ற சித்துதாமும் செழுமையுடன் சிலகாலமிருந்துமேதான்
முத்தான பவக்கடலை யொழித்துமல்லோ மூதுலகில் சமாதிக்குப்போகவென்று
பத்தியாய் சீஷருடன் பரமநாதா பாருலகுவாசல்தனைவிட்டொழித்து
நித்தியமு தானதொரு கடவுதன்னை நிட்களமாய் தானினைத்து துதித்திட்டாரே

விளக்கவுரை :


3974. துதித்துமே ஐராவதத்தின் பக்கல் துறையான வாற்றோரந் தன்னிற்சென்று
மதிப்பான சங்கநிதி பதுமநிதிதன்னை மார்க்கமுடன் கண்டல்லோசித்துதாமும்
விதிப்படியே சமாதிக்கு யிடமுந்தேடி விருப்பமுடன் தானழைத்து சீஷர்தம்மை
ததியான மாண்பர்களே பின்னுங்கேளும் தன்மையுடன் சமாதிக்குச் செல்வேன்பாரே

விளக்கவுரை :


3975. பாரப்பா சமாதிதன்னி லிரங்கியல்லோ பத்தாண்டு முடிவுவரையிருப்பேனென்றும்
சீரப்பா சிலகாலஞ்சென்றபின்பு சிறப்புடனே வையகத்தில் வருவேனென்றும்
காரப்பா சமாதியிடம் வீற்றிருங்கள் காசினியில் வெகுகோடிவதிசயங்கள்
நேரப்பா வதிசயங்கள் காணப்போரீர் நேர்மையுடன் சித்தனது வுரைபொய்யாதே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar