3966. ஆச்சப்பா சீஷவர்க்கஞ் சொல்லக்கேளும் வப்பனே பின்னுமல்லோ சமாதிசொல்வேன்
மூச்சடங்கி சமாதிதனில்
இருப்பேனென்றும் மூதுலகில் மறுபடியும் வருவதில்லை
மாச்சலுடன் வுகமது
முடிவுகாலம் மகிழ்ச்சியுடன் சீடர்களைக் காணலாகும்
வாச்சுதே விட்டகுறை
நேருமானால் வளமான சீஷரெல்லாங் காண்பேன்பாரே
விளக்கவுரை :
3967. பாரேதான் என்றலுமே
பகவான்தானும் பாரின்மிசை யாசையது விட்டொழித்து
நேரேதான் சமாதிக்கு
சென்றாரங்கே நேர்மையுடன் பகவானும் மண்ணிற்சென்று
போரேன்யான் பொன்னுலகப்
பதியைத்தேடி பொங்கமுடன் எந்தனது வாசையற்று
சீராக தானிருங்கள்
சீஷவர்க்கம் சிற்பரனார் பதிபோரேன் என்றார்தாமே
விளக்கவுரை :
[ads-post]
3968. தாமான யின்னமொரு சூட்சங்கேளு
தகமையுள்ள சுந்தரானந்தசித்து
காமான சித்தினுட
பெருமைசொல்வேன் காசினியில் இவர்போலும் சித்துமுண்டோ
வேமான மானதொரு சித்துதாமும்
வெகுகோடி காலம்வரைதாமிருந்தார்
நாமான மென்றதொரு காயகற்பம்
நாதாந்த சித்துமுனி கொண்டார்தாமே
விளக்கவுரை :
3969. கொண்டதொரு சுந்தரானந்தர்
தாமும் குவலயத்தில் வெகுமாண்பர்சித்தருக்கு
அண்டமுடியானதொரு
சாத்திரங்கள் வனேகமாய்க் கற்பித்தார் சித்தர்தாமும்
கண்டறிந்த
சித்துவர்க்கமாயிரம்பேர் கருவாளி கூடிருந்தார்சித்துதாமும்
தொண்டரெனும் சித்துமுனி
சீஷவர்க்கம் துரைராஜ சுந்தரனை சூழ்ந்தார்பாரே
விளக்கவுரை :
3970. பாரேதான் சுந்தரானந்த சித்து
பாரினிலே இருந்தசுகம் போதுமென்று
நேரேதான் வடக்குமுகந்
தன்னிலப்பா நெடுந்தூரமான வயிராவதந்தான்
சீரேதான் யெண்ணூறு காதமப்பா
சிறப்பான வயிராவதமலைதானாகும்
ஆரொன்று மலையோரந்
தன்னிலுண்டு வழகான மண்டபந்தா னிருக்குந்தானே
விளக்கவுரை :