போகர் சப்தகாண்டம் 4046 - 4050 of 7000 பாடல்கள்
4046. தந்தாரே சீனபதி
விட்டுவந்தேன் தகமையுள்ள குளிகையது பூண்டுகொண்டு
வந்தேனே
தயிர்கடலுக்கப்பாலப்பா வாகான வடகோடி கானகத்தில்
சொந்தமுடன் யானுமல்லோ
சென்றேனங்கே சுத்தமுள்ள யாசீர்மங்கண்டேன்யானும்
அந்தமுடன் ஆசீர்மம்
நடுமையத்தில் அழகான வாயக்கால் கூடந்தானே
விளக்கவுரை :
4047. தானான கூடமது சித்தரக்கூடம்
தன்மையுள்ள சித்தர்களும் அறியாநாடு
கோனான எனதையர் காலாங்கிநாதர்
கொற்றவனார் எந்தனுக்கு வுரைத்தநீதி
மானான வடகோடி கானகத்தில் வளமான
வாயக்கால் மண்டபந்தான்
தேனான மனோன்மணியாள்
இருக்கும்ஸ்தானம் தேவியென்ற கூடமது விசித்திரமாமே
விளக்கவுரை :
[ads-post]
4048. ஆமேதான் ஆயக்கால்
மண்டபத்தில் அண்டவொண்ணா தேவரிஷிகூட்டமப்பா
தாமேதான் காலாங்கி
சொன்னவாக்கு தாரிணியில் மெய்யான வார்த்தைகொண்டு
போமெனவே வடகோடிகானகத்தில்
பொங்கமுடன் குளிகையது பூண்டுகொண்டு
வேமெனவே யாசீர்மம்
தன்னிற்சென்றேன் வேதாந்தத் தாயினது யிடங்கண்டேனே
விளக்கவுரை :
4049. கண்டேனே மனோன்மணியாள் வீற்றிருக்கும் கடிதான வாசீர்மந்தன்னைக்கண்டேன்
அண்டவொண்ணாச் சேனையது
ரிஷிகள்கூட்டம் அங்ஙனமேயான்கண்டு பயமுங்கொண்டு
தொண்டரெனும் ரிஷிமுனிவர்
சித்தர்தாமும் தோற்றமுடன் ஆசீர்மந்தன்னைச்சுற்றி
கொண்டல்வண்ணன் அச்சுதனும்
முன்னேநிற்க கோடான கோடிவரை பார்த்திட்டேனே
விளக்கவுரை :
4050. பார்த்தேனே மனோன்மணியாள்
ஆசீர்மத்தில் பலகோடி நவகோடி ரிஷியார்தாமும்
கார்த்துமே சதாகாஞ்சூழ்ந்திருக்க
கண்மணி நவரத்தின வாசீர்மத்தில்
தீர்த்தமுடன் தடாகமென்ற
பொய்கைதன்னில் திகழான மனுக்கூட்டம் அனேகம்பேர்கள்
சார்த்த கையாழ்வார்
பன்னீராயிரந்தான் சட்டமுடன் தவசிருக்கக் கண்டேன்தானே
விளக்கவுரை :