போகர் சப்தகாண்டம் 4106 - 4110 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4106. மதித்துமே எந்தனையும் கேட்டபோது மகத்தான காலாங்கிச்சீடனென்றே
துதிப்புடனே எந்தனையுமாசீர்மித்து துப்புறவாய் பட்சமதுகொண்டு என்னை
கதிரோன்கள் காணாத ஆழிக்கோட்டை கருவுடனே யுளவறிந்து குளிகைகொண்டு
விதிப்படியே விட்டகுறை யிருந்ததாலே விருப்பமுடன் உந்தனையும் காணலாச்சே

விளக்கவுரை :


4107. காணுதற்கு காலம்வந்து சேர்ந்துதென்று காலாங்கி நாதரதுகிருபையாலே   
வேணபடி பலாபலத்தின் மகிமையாலே வினையமுடன் கோட்டையது கண்டாயென்று
கோணாமல் மனதுவந்து என்னைப்பார்த்து கொற்றவனே காலாங்கிசீடர்யென்று
நீணவே பிரிங்கிமகாரிஷியார்தாமும் நீட்சியுடன் சந்தோஷம்கொண்டார்தாமே

விளக்கவுரை :

[ads-post]

4108. தாமான பிரிங்கி மகாரிஷியைத்தானும் தகமையுடன் கண்டுவந்து வுறவுபேசி
ஆமான மானதொரு வாணிமுத்து அலைகடலில் விளைகின்ற வதிதங்கேட்டேன்
நாமான வார்த்தைக்கி வன்பர்தாமும் நாதரதுகாலாங்கி கிருபையாலே
ஏமாந்து முத்துரையும் வளமைசொன்னார் எழிலான முத்துவளங்கண்டிட்டேனே

விளக்கவுரை :


4109. கண்டேனே முத்துறையும் நாடும்கண்டேன் கருவான ஆணிமுத்து தானுங்கண்டேன்
கொண்டேனே வெகுதூரங் குளிகைகொண்டு கொப்பெனவே முத்துறையும் பதியுங்கண்டேன்
விண்டிட்ட குளிகையது பலத்தினாலே வீரான ஆழிவரை சுத்திகண்டேன்
உண்டதொரு குண்ணளவு முத்துகண்டேன் வுகமையுள்ள சிப்பிமுத்து கண்டேன்பாரே

விளக்கவுரை :


4110. பார்த்தேனே மலைமலையாய் முத்துதன்னை பாங்கான ஆழிக்குள் அனேகங்கண்டேன்
நேர்த்தியஉடன் முத்தெடுக்கும் பதமுங்கண்டேன் நேர்மையுடன் உளவுதனை யறிந்துகொண்டு
சேர்த்துமே ஆணிமுத்து கையிலேந்தி சிறப்புடனே சீனபதியானுஞ்சென்றேன்
பூர்த்தியுடன் குளிகைதனை விட்டிறங்கிப் புகழாக சமாதியிட மிறங்கினேனே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 4101 - 4105 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4101. காணவே கலியுகத்துமுன்னேயப்பா காலாங்கிநாதர் சொன்னதிருவாக்குத்தான்
தோணவே யெந்தனுக்கு இப்போதல்லோ தோற்றமுஐடன் எந்தனுக்குக்காணலாச்சு
வாணர்முதல் சொன்னதொரு கோர்வையெல்லாம் வளமாக இவ்வண்ணஞ் சொன்னதில்லை
பூணவே குளிகையது பூண்டுகொண்டு புகழான கோட்டைதனை பார்த்திட்டேனே

விளக்கவுரை :


4102. பார்த்தேனே பிரிங்கி மகாரிஷியார்தன்னை பட்சமுடன் அடியேனும் அஞ்சலித்து
தீர்த்தமுடன் சோடசோபாரத்தோடு திக்காதி பிரிங்கிரிஷியார்முன்னே
சேர்த்துமே கரங்குவித்து சிரமேல்வைத்து சிறப்புடனே தான்பணிந்து வஞ்சலித்தேன்
பூர்த்தியுடன் மனதுவந்து சாமிபாதம் பொன்னடியை மறுக்காலும் தொழுதிட்டேனே

விளக்கவுரை :

[ads-post]

4103. தொழுதுமே முக்காலும் பணிந்துமேதான் தொல்லுலகையான் மறந்துதுதித்தேனப்பா
பழுதுபடாத திருமேனி க்காவலாரே பாருலகில் பள்ளிகொண்ட நாயனாரை
முழுதுமே யாழியது கோட்டைசுத்தி மோனமுடன் குளிகைகொண்டு நிற்கும்போது
வழுவாக யாசீர்மம் அங்கேகண்டேன் வண்மையுள்ள கிருஷ்ணராசீர்மந்தானே 

விளக்கவுரை :


4104. தானான துவாரகையாம் புருடனப்பா தாக்கான கிருஷ்ணரவராசீர்மந்தான்
தேனான திருச்சங்குகோட்டைக்குள்ளே தெரிசித்தேன் முத்தினாசீர்மம்பின்னால்
வானான பிரிங்கி மகரிஷியார்பக்கம் வகுப்பான வாணிமுத்துக்கோட்டையோரம்
மானான மகதேவன் ஆசீர்மந்தான் வையகத்தில் பார்தவர்கள் இல்லைதானே

விளக்கவுரை :


4105. இல்லையே ஒருவருந்தான் கண்டதில்லை எழிலான பிரிங்கிரிஷி கோட்டைகண்டேன்
புல்லவே யடியேனைப் பார்த்தபோது புகழான சிறுபாலா வென்றுசொல்லி 
வல்லதொரு காலாங்கி சீடபாலா வாகான போகரென்று தானழைத்து
சல்லாபங் கொண்டல்லோ என்னைப்பார்த்து சட்டமுடன் யாரென்று மதிப்பிட்டாரே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 4096 - 4100 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4096. கண்டேனே தனக்கோட்டி கடல்மையத்தில் கனமான திருச்சங்கு யாழிக்கோட்டை
அண்டர்முதல் தேவாதி ரிஷிகளெல்லாம் வன்புடனே வந்திரங்கும் கோட்டையப்பா
தண்டுல கிருஷ்ணாவதாரந்தானும் தகமையுள்ள வாசீர்மமொருபக்கந்தான்
கொண்டல்வண்ணனாசீர்மம் அதற்குப்பின்னால் குறிப்பான யேழுசுத்து கோட்டைபாரே

விளக்கவுரை :


4097. பாரேதான் ஏழுசுத்து கோட்டையப்பா பாங்கான ஆணிமுத்து மதில்தானாகும் 
நேரப்பா ஆணிமுத்து தன்னினாலே நிலையான கோட்டையது கட்டிருக்கும் 
சீரேதான் ஏழுசுத்து கோட்டைக்குள்ளே சிறப்பான பிரிங்கி மகாரிஷியாசீர்மம்
கூரேதான் மாண்பர்களும் காணப்போமோ குவலயத்தில் தனக்கோட்டி மகிமைதானே

விளக்கவுரை :

[ads-post]

4098. தானான ஏழுசுத்து கோட்டைக்குள்ளே நவகோடி ரிஷிகளுமே சூழ்ந்திருப்பார்
மானான மதில்தனிலே சித்துமாண்பர் மகாதவசிவீற்றிருப்பார் கோட்டைதன்னில்
மோனான வாசீர்மந் தன்னில்தானும் மகத்தான முத்துசிம்மாதனந்தான் 
கோனான பிரிங்கிமகாரிஷியார்தாமும் கொற்றவனார் வீற்றிருக்கும் பதிதானாச்சே

விளக்கவுரை :


4099. ஆச்சப்பா குளிகையது பூண்டுகொண்டேன் வப்பனே யாசீர்மந்தன்னிற்சென்றேன்
கூச்சலுடன் ரிஷிமுனிவர் சித்தர்கூட்டம் கூறவொண்ணா கோஷ்டமது சொல்லப்போமோ
பேச்சரியா மாண்பர்களோ காணப்போரார் பேரான பிரிங்கி முத்துரிஷியாசீர்மம்
மாச்சலுடன் காண்பதற்கு முடியாதப்பா மகத்தான சித்தரு கோட்டையாச்சே

விளக்கவுரை :


4100. கோட்டையாந் திருச்சங்கு கோட்டையப்பா குறிப்பான ஆணிமுத்து கோட்டைதன்னை
நீட்டமுடன் கோட்டைதனை யறியமாட்டார் நீடான சாகரத்தில் சொல்லமாட்டார்
வாட்டமுடன் குளிகைகொண்டு காலாங்கிநாதர் வகுப்பான மகிமையினால் கண்டேன்பாரு
தேட்டமுடன் எனதையர் சொன்னவாக்கு தெளிவான சொற்படியே காணலாச்சே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 4091 - 4095 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4091. தானான யாகமது நடந்தபோது தாக்கான தங்கையென்ற பதியில்வாழும்
தேனான மாதைமையாள் சீதாதேவி தென்னிலங்கை பதியைவிட்டு வாசீர்மத்தில்
கோனான குருபரனார் வேழ்வியாகம் கோதையருந்தான் பார்க்கவந்தபோது
பானான தனக்கோட்டி கடலில்தானும் பாரமுடன் சத்தமது கேட்கலாச்சே

விளக்கவுரை :


4092. கேழ்க்கவென்றால் இன்னமொரு மார்க்கங்கேளு கெடியான பற்பமென்ற மனையில்தானும்
வேழ்க்கமுடன் காற்றோசைத் தன்னினாலே வேகமுடன் அலைபனையும் வீசலாச்சு
சூழ்க்கமுடன் சப்தமதை மாதுகேட்டு சுத்தமுள்ள யாசீர்மம் யாகந்தன்னில்
தாழ்க்கமல நவரத்தின கசிதந்தன்னில் தவிக்கவொட்ட சப்தமதை கண்டார்தாமே

விளக்கவுரை :

[ads-post]

4093. கண்டதொரு அலைகடலின் சப்தந்தன்னை காரிழையாள் ஸ்ரீராமர் தேவியப்பா
கொண்டல்வண்ணன் அச்சுதனை தனைநினைத்து கொடுத்ததொரு சாபத்தால் அலையும்போச்சு
விண்டபடி கற்பகத்தருவுக்கப்பா மேதினியில் சப்தமது யில்லைகண்டீர்   
தண்டலென்னும் பனைமரமும் அசைவுமில்லை தாரிணியில் தனக்கோட்டி மார்க்கந்தாமே

விளக்கவுரை :


4094. மார்க்கமுடன் தென்திசையில் கடலில்தானும் மகத்தான ஸ்ரீராமர்தேவிதன்னால்
ஏர்க்கவே கடலோசை நின்றுபோச்சு எழிலான தனக்கோட்டி மகிமையப்பா
தீர்க்கமுடன் சம்புமகாரிஷிபலத்தால் சங்கதுவும் பிறக்கலாச்சு
வர்க்கமுடன் திரிசங்கு தன்னினாலே வாகான கோட்டையது கட்டலாச்சே

விளக்கவுரை :


4095. ஆச்சென்று போகாமலின்னஞ்சொல்வேன் அப்பனே புலிப்பாணிமைந்தாகேளு
மாச்சலென்ற தனக்கோட்டி கீழ்பாகத்தில் மகத்தான திருச்சங்கு கோட்டையுண்டு
நீச்சுடனே கடல்தனில் பிறந்தசங்கு நிலைகோடி சங்கதனை யெடுத்துமல்லோ
வீச்சுடனே காதவழிக்கோட்டைதானும் விருப்பமுடன் கட்டிருக்கக் கண்டேன்பாரே

விளக்கவுரை :


Powered by Blogger.