4091. தானான யாகமது நடந்தபோது
தாக்கான தங்கையென்ற பதியில்வாழும்
தேனான மாதைமையாள் சீதாதேவி
தென்னிலங்கை பதியைவிட்டு வாசீர்மத்தில்
கோனான குருபரனார்
வேழ்வியாகம் கோதையருந்தான் பார்க்கவந்தபோது
பானான தனக்கோட்டி
கடலில்தானும் பாரமுடன் சத்தமது கேட்கலாச்சே
விளக்கவுரை :
4092. கேழ்க்கவென்றால் இன்னமொரு
மார்க்கங்கேளு கெடியான பற்பமென்ற மனையில்தானும்
வேழ்க்கமுடன் காற்றோசைத்
தன்னினாலே வேகமுடன் அலைபனையும் வீசலாச்சு
சூழ்க்கமுடன் சப்தமதை
மாதுகேட்டு சுத்தமுள்ள யாசீர்மம் யாகந்தன்னில்
தாழ்க்கமல நவரத்தின
கசிதந்தன்னில் தவிக்கவொட்ட சப்தமதை கண்டார்தாமே
விளக்கவுரை :
[ads-post]
4093. கண்டதொரு அலைகடலின்
சப்தந்தன்னை காரிழையாள் ஸ்ரீராமர் தேவியப்பா
கொண்டல்வண்ணன் அச்சுதனை
தனைநினைத்து கொடுத்ததொரு சாபத்தால் அலையும்போச்சு
விண்டபடி
கற்பகத்தருவுக்கப்பா மேதினியில் சப்தமது யில்லைகண்டீர்
தண்டலென்னும் பனைமரமும்
அசைவுமில்லை தாரிணியில் தனக்கோட்டி மார்க்கந்தாமே
விளக்கவுரை :
4094. மார்க்கமுடன் தென்திசையில்
கடலில்தானும் மகத்தான ஸ்ரீராமர்தேவிதன்னால்
ஏர்க்கவே கடலோசை
நின்றுபோச்சு எழிலான தனக்கோட்டி மகிமையப்பா
தீர்க்கமுடன்
சம்புமகாரிஷிபலத்தால் சங்கதுவும் பிறக்கலாச்சு
வர்க்கமுடன் திரிசங்கு
தன்னினாலே வாகான கோட்டையது கட்டலாச்சே
விளக்கவுரை :
4095. ஆச்சென்று
போகாமலின்னஞ்சொல்வேன் அப்பனே புலிப்பாணிமைந்தாகேளு
மாச்சலென்ற தனக்கோட்டி
கீழ்பாகத்தில் மகத்தான திருச்சங்கு கோட்டையுண்டு
நீச்சுடனே கடல்தனில்
பிறந்தசங்கு நிலைகோடி சங்கதனை யெடுத்துமல்லோ
வீச்சுடனே
காதவழிக்கோட்டைதானும் விருப்பமுடன் கட்டிருக்கக் கண்டேன்பாரே
விளக்கவுரை :