போகர் சப்தகாண்டம் 4126 - 4130 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4126. பாரேதான் வடகோடியாழிதன்னில் பாங்குடனே குளிகைகொண்டு யானுஞ்சென்றேன்
நேரேதான் குளிகைகொண்டு செல்லும்போது நேர்மையுடன் ஆசீர்மமமொன்றுகண்டேன்
ஊரதுபோல் கடலாழிநடுமையத்தில் ஓகோகோ தீவதுதான் கண்டேனப்பா
சேரேதான் குளிகையது சென்றுயானும் சேர்ந்தேனே தீவுதனில் கிட்டினேனே

விளக்கவுரை :


4127. கிட்டவே தீவுதனில் செல்லுமபோது கெடியான தேவதா மலையொன்றுண்டு
குட்டவே பாசிபோலிருந்ததப்பா மூதுலகில் மலையென்று நினைத்துக்கொண்டேன்
வட்டமுள்ள பாறைதனை சோதித்தேன்யான் வளமான பச்சையென்ற மலைதானப்பா
திட்டமுடன் கண்டறிந்தேன் பச்சையப்பா திடமான பச்சைமலை பார்திட்டேனே 

விளக்கவுரை :

[ads-post]

4128. பார்த்தேனே மலையினிட மகிமைமெத்த பாருலகில் சித்தர்முனி கண்டதில்லை
தீர்த்தமுடன் மலைமீதில் சுனைதானுண்டு திறமான பச்சையென்ற நிறத்தைப்போல
கார்த்துமே காவலுடன் வெகுகோடிசித்தர் கதிகாணா மலைதனிலே யிருப்பாரங்கே
பூர்த்தியாய் அவர்களிடம் சென்றேன்யானும் புகழாக வடிபணிந்து தொழுதிட்டேனே

விளக்கவுரை :


4129. தொழுதேனே சித்தர்வர்க்கந்தன்னைக்கண்டேன் தோற்றமுடன் குளிகைகொண்டு பக்கல் சென்றேன்
பழுதுபடா மேனியது பார்க்கும்போது பச்சையென்ற திருமேனி யென்னலாகும்
கழுமுடனே யிமாப்பட்சியெல்லாமப்பா காணுகைக்குப் பச்சைநிறமென்னலாமே

விளக்கவுரை :


4130. என்னவே என்தேகம்பச்சையப்பா எழிலான ஜலமெல்லாம் பச்சையப்பா
துன்னவே மண்டலமும் பச்சையப்பா துறையான பூமிமுதல் பச்சையப்பா
பன்னவே பார்லோகம் பச்சையப்பா பாங்கான விருட்சமுதல் பச்சையப்பா
சொன்னதொரு மார்க்கமெல்லாம் பச்சையப்பா சுடரொளியை யென்சொல்வேன் போகர்தாமே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 4121 - 4125 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4121. துறையான துறைவழியே கண்டபோது துப்புறவாய் சுனகமெல்லாங் கைக்குள்ளாச்சு
மறைவான பொருளெல்லாம் கண்ணிற்றோற்றும் மகத்தான நிதிகளெல்லாம் எடுக்கலாகும்
திறைகடலில் நீராவிக்கப்பல் தன்னால் திறளான களஞ்சியத்தைக் காணலாகும்
குறையாமல் செல்வமது எந்நாளுந்தான் கொற்றவனே யுந்தனுக்கு வாய்க்கும்பாரே

விளக்கவுரை :


4122. வாய்க்குமே மகமேருபர்வதந்தான் வாகான குகையாவிப்பர்வதந்தான்
தீய்க்கவே தீவுங்காணலாகும் திறைகோடி கடல்தனை சுற்றலாகும்
வேய்ப்பான பதிதனிலே மகிமையெல்லாம் வேகமுடன் மரக்கலத்தால் காணலாகும்
காய்க்கவே சீனபதியுலகத்தார்க்கு சட்டமுடன் தானமைத்த நூலிதாமே

விளக்கவுரை :

[ads-post]

4123. நூலான போகரேழாயிரந்தான் நுணுக்கமுள்ள பொருளெல்லாம் இதிலேதோயும்
பாலான சாத்திரந்தான் சத்தகாண்டம் பாலகனே யிக்காண்டம் ஐந்தாம்காண்டம்
மேலான காண்டமிது யேழுக்குள்ளே மேதினியில் கருவிகரணாதியெல்லாம்
மாதான சத்தசாகரமடக்கம் மகத்தான போகர் பெருநூலாமே

விளக்கவுரை :


4124. பெருநூலாம் போகரேழாயிரந்தான் பெருக்கமுடன் பாடிவைத்தேன் சீனத்தார்க்கு
விருநூலாம் அடியேனுஞ் சொன்னமார்க்கம் விருப்பமுடன் அகஸ்தியரும் ஒருநூல்செய்தார்
குருநூல் காவியம் பன்னீராயிரந்தான் கும்பமுனி பாடிவைத்தார் காண்டமப்பா   
திருநூலாங் காண்டமது பனிரெண்டாகும் திறமான வாருயுறுவேதந்தானே

விளக்கவுரை :


4125. வேதமாம் யின்னமொரு மார்க்கங்கேளு விருப்பமுடன் புலிப்பாணி மஐந்தாநீயும்
நீதமுடன் குளிகையது பூண்டுகொண்டு நீதியுடன் சீனபதிவிட்டுயானும்  
போதமுடன் வடகோடி கானகத்தை பொங்கமுடன் திரும்பிவந்தேன் அடியேன்தானும்
காதமெனும் கடலாறுதன்னிலப்பா கவனமுடன் குளிகைகொண்டு சென்றேன்பாரே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 4116 - 4120 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4116. தானான தனக்கோட்டி வடபாகத்தில் தாக்கான முத்தாழிதீவுமுண்டு
தேனான சித்தர்முனி கண்டதில்லை தெவதா ரிஷிகளெல்லாம் காணுமாழி
பானான பராபரியாள் வாசஞ்செய்யும் பாங்கான முத்துறையுந்தீவுமாச்சு
மானான மண்டபத்தில் யாருங்காணார் மகத்தான முத்துரையுந் தீவுமாச்சே

விளக்கவுரை :


4117. ஆச்சப்பா தீவுவழி செல்லும்போது வப்பனே கடல்தனிலே அடக்கமுண்டு
நீச்சுடைய கடல்தனிலேபோகும்போது நீடான மலைப்பாறைக்குண்ணுமுண்டு
வீச்சுடனே நீராவி மரக்கலந்தான் வீறுடனே யாழிதனில் செல்லும்போது
மாச்சலென்ற மலைவளத்தா ரிடருண்டாகும் மகத்தான மரக்கலமும் உடைந்துபோமே

விளக்கவுரை :

[ads-post]

4118. போமேதான் நீராவிக்கப்பல்தானும் பொங்கமுடன் கடல்தனிலே செல்லும்போது
நாமேதான் கண்ணாடிக்கைபிடித்து நலமுடனே யாழிதம் பார்க்கும்போது
வேமேதான் கண்ணாடிக்கைபிடித்து விருப்பமுடன் கப்பல்முனைத்தனிலிருந்து
தாமேதான் கண்ணாதன்னையப்பா தாரிணியில் ஆழிதனைக் காணுவாயே

விளக்கவுரை :


4119. காணுகையில் உந்தனுக்குப் புத்திமானே கடலிலுள்ள மர்மமெல்லாம் கண்ணிற்றோற்றும்
தோணுமே மலைப்பாறைக் கல்களெல்லாம் தோற்றுமே யுந்தன்கண்ணாடியாலே
பூணவே வழிதடத்தைக் கண்டுமல்லோ புகழான மலைப்பாறையொதுங்கியேதான்
நீணவே நெடுந்தூரஞ் செல்லலாகும் நீராவிக் கண்ணாடிக் கப்பல்தானே

விளக்கவுரை :


4120. தானான நீராவிக்கப்பல்கொண்டு தகமையுள்ள வாணிமுத்து யெடுக்கலாகும்
தேனான ஆணியென்ற முத்தைத்தானும் தெளிவாகக் கடல்தனிலே எடுக்கலாகும்
கோனான குருசொன்ன வாக்குதானும் குறையாமல் ஆழிதனில் நடத்தினாக்கால்
பானான பாதாளமுத்தையெல்லாம் பாங்குடனே எடுப்பதற்கு துரையுமாச்சே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 4111 - 4115 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4111. இறங்கியே காலாங்கி நாதர்தம்மை யெழிலான சமாதிதனை தெரிசித்தேன்யான்
திறமான காலாங்கிநாதர்தானும் தீரமுடன் யான்வந்தசேதிகண்டு
வரமுடனே எந்தனுக்கு வசரீராக வாக்களித்தார் எந்தனது குருபரன்தான்
கரங்குவித்து முடிவணங்கி யடியேன்தானும் கர்த்தாவைத் தெண்டனிட்டுப் பணிந்திட்டேனே

விளக்கவுரை :


4112. பணிந்தேனே காலாங்கிநாயர்பாதம் பட்சமுடன் தெண்டனிட்டுப் பதியிற்சென்றேன்
அணியணியாய் சீனபதிமாண்பரெல்லாம் வன்புடனே எனைவந்துகண்டாரப்பா
துணிவுடனே கொண்டுவந்த முத்தையெல்லாம் துப்புறவே சீனத்தார்க்கறியச்சொல்லி
மணியான முத்துறையும் கடலையானும் மாண்பர்களே கண்டுவந்தேனென்றிட்டேனே

விளக்கவுரை :

[ads-post]

4113. இட்டேனே முத்திருக்கும் பதியுஞ்சொன்னேன் எழிலான திருச்சங்குக்கோட்டை சொன்னேன்
வட்டமுடன் திருசங்குகோட்டைபக்கல் வாகான கிருஷ்ணவாசீர்மஞ்சொன்னேன்
பட்டணங்கள் சீனபதிமார்க்கமெல்லாம் பட்சமுடன் யான்வந்து சேதிகண்டு
திட்டமுடன் மாண்பரெல்லாம் எந்தனுக்கு தீரமுடன் ஆசீர்மஞ்சொன்னார்பாரே

விளக்கவுரை :


4114. பார்க்கவே எந்தனுக்கு பணிந்துமேதான் பட்சமுடன் முத்திருக்குந் தீவுதன்னை
தீர்க்கமுடன் போகவென்று வடையாளங்கள் தீரமுடன் கேட்டார்கள் மாண்பரெல்லாம்
ஏர்க்கவே யாழியென்னுங் கடலிலப்பா எழிலான முத்தெடுக்கப் போகாதப்பா
மார்க்கமுடன் குளிகையது பூண்டுகொண்டு மகத்தான முத்தெடுக்க வேண்டும்பாரே

விளக்கவுரை :


4115. பாரேதான் குளிகையது யில்லாவிட்டால் பாங்கான நீராவிக்கப்பல் வேண்டும்
நேரேதான் நீராவிக்கப்பல்தன்னில் நேர்மையுடன் நிர்மித்து நீங்களெல்லாம்
ஊரேதான் நீராவிக்கப்பல்கொண்டு வுத்தமனே முத்தாழிக்காணவேண்டும்
சேரேதான் ஆழிதடம்நடக்கும்போது சீரான யுத்தியது வேண்டுந்தானே

விளக்கவுரை :


Powered by Blogger.