போகர் சப்தகாண்டம் 4271 - 4275 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4271. எட்டான மாற்றதுவும் தங்கம் எழிலான ஸ்ரீராமர் காசியப்பா
மட்டான தங்கமது மதிப்புமெத்த மகிதலத்தில் மகிமையது மகிழப்போமோ
திட்டமுடன் கெந்தியென்ற தங்கச்செம்பாம் சிவராஜயோகியவன் செய்வான்பாரு
சட்டமுடன் விதியாளி செய்வானல்லால் சாங்கமுடன் மற்றவருஞ் செய்யார்தாமே

விளக்கவுரை :


4272. செய்யாரா மற்றொருவரானாலுந்தான் செம்மையுடன் கைபாகஞ்செய்பாகந்தான்
எய்யாது கெந்தினுட செம்புமார்க்கம் யெடுக்கவுமே பாகமது காணப்போமோ
மையான கெந்தியது செம்பேயானால் மகத்தான வேதையிது கோடிக்கோடும்
துய்யதொரு மதிகாணும் பழுத்ததங்கம் துப்புறவாய் பின்னுமந்த மதியில்தாக்கே

விளக்கவுரை :

[ads-post]

4273. தாக்கவே பத்துக்கு வொன்றுதங்கம் தண்மையுடன் வுருக்கிப்பார் மாற்றேயாகும்
நோக்கமுடன் கெந்தியென்ற செம்புதன்னை நேர்மையுடன் ஆறுமாற்றாணிமேலே
நூக்கமுடன் பத்துக்கு ஒன்றுதாக்க துடியான மாற்றதுவும் பத்தேயாகும்  
வாக்கயுவும் பொய்யாது ரோமர்வேதை வண்மையுள்ள கலெந்தியென்ற செம்புதானே

விளக்கவுரை :


4274. தானான சேவலென்ற மாமிசத்தை தகமையுடன் ரோமத்தைப்போக்கிநன்றாய்
தேனான குடல்போக்கி எலும்புபோக்கி தெளிவுறவே அறுசுவையுந்தன்னோடொக்க
பானான பதமேத்தி சமைத்துமல்லோ பாங்குபெற மாமிசத்தையுண்டபோது 
மானான தேகமது காயகற்பம் மகத்தான சாரமது ஏறலாச்சே

விளக்கவுரை :


4275. ஏறவென்றால் மண்டலந்தான் இப்படியே கொண்டால் எழிலான தேகமது கற்றூணாகும்
சீரலென்ற சுவாசமது கீழ்நோக்காகும் சிறப்பான தேகமது காந்திவீசும்
பீக்கலென்ற சுரோனிதம்தான் கட்டிப்போகும் பேரான தாதுவிர்த்தி யதிகமாகும்
கூறவே முடியாது சேவல்கற்பம் குவலயத்தில் ரோமரிஷிமார்க்கந்தானே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 4266 - 4270 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4266. கோடியாஞ் சாதியென்ற சேவல்தானும் கொற்றவனாம் ரோமரிஷி கானகத்தில்
தேடியே பெருஞ்சாதி சேவல்தன்னை தெளிவுடனே கண்டல்லோ வாராய்ந்தேதான்
நீடியே கெந்தகமும் பலந்தான் பத்து நேர்மையுடன் பருங்குறுவை யரிசிநேராம்
சூடியே குழிக்கல்லில் தன்னிலிட்டு துப்புறவாய் தானரைப்பாய் சாமம்நாலே

விளக்கவுரை :


4267. நாலான சாமமது மேதிப்பாலால் நலம்பெறவேதானரைப்பாய் நாலுசாமம்
சீலமுடன் மாவதனை திரட்டியேதான் சிறப்பான சேவலுக்கு வுணவுயீய  
கோலமுடன் சேவலதுவுண்டபின்பு கொற்றவனே குகைக்குள்ளே யடைத்துமேதான்
பாலமுர்தமுண்டபின்பு பட்சிதன்னை பான்மையுடன் தானமைத்தார் குகையினுள்ளே

விளக்கவுரை :

[ads-post]

4268. உள்ளான குகைதனிலே நாலாவட்டம் வுத்தமனே செவலுக்கு வுணவுதந்து
எள்ளளவும் எச்சமது வெளியேகாமல் யெழிலாகத் தான்சேர்த்துக்காயப்போடு
தெள்ளமிர்தமானதொரு காரமிட்டு தெளிவாக மூசையிட்டுச் சீலைசெய்து
கள்ளமின்றி ரவிதனிலே காயவைத்து கலங்காமல் மூசைதனை ஊதிடாயே

விளக்கவுரை :


4269. ஊதவென்றால் சரவுலையில் வைத்துவூது வுத்தமனே தீயாறி எடுத்துப்பாரு
நீதமுடன் மூசைதனை யுடைத்துப்பார்க்க நிலைத்துதடா கெந்தியென்ற செம்புமாச்சு
தோதமுடன் செம்புதனை எடுத்துக்கொண்டு தோராமல் மறுபடியும் பொடித்துமேதான்
சாதமுடன் கெந்தியது பொடியைச்சேர்த்து சட்டமுடன் சேவலுக்குக் கொடுத்திடாயே

விளக்கவுரை :


4270. கொடுக்கவென்றால் சேவலுக்கு முன்போல்செய்து குகைதனிலே தானெடுத்து எச்சந்தன்னை
தடுக்காமல் முன்போலே வுருக்கித்தீரு சட்டமுடன் செம்பதுவும் தங்கச்செம்பாம்
வடுவான செம்பதுவும் எடுத்துக்கொண்டு வண்மையுள்ள மதிதனிலே பத்துக்கொன்று
நடுவான மூசைதனையுருக்கிக்கொண்டு நன்மையுடன் கொடுத்திடவே மாற்றெட்டாமே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 4261 - 4265 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4261. ஒழித்தாரே சித்தரெல்லாம் இந்தமார்க்கம் ஓகோகோ நாதாக்களெல்லாருந்தான்
வழியுடனே வையகத்தைத்தான்மறந்து வல்லான வுயிர்தனையே போக்கடித்தார்
பழியுடனே கல்லான தேகந்தன்னை பான்மைபெற பாரினிலே யொழித்துப்போட்டார்
அழியான வையகத்திலொருவருந்தான் வப்பனே வையகத்தில்லைதானே

விளக்கவுரை :


4262. தானான தத்துவங்கள் அதிகஞ்சொல்லி தட்டழிந்து போகுமிந்த காயமப்பா
கானான குருவென்ற சொன்னசித்தும் குவலயத்தை தான்மறந்து சென்றாரப்பா
தேனான மனோன்மணியாள் வரமும்பெற்று தேசத்தில் இருந்தசித்தும்போனாரப்பா
பானான பரமருட பாதங்காண பாருலகில் எல்லோரும் பிறந்தார்தாமே

விளக்கவுரை :

[ads-post]

4263. பிறந்தவரு மொருகாலமிருந்ததுண்டோ பேருலகில் வாக்கியமும் மெய்யோபொய்யோ
இறந்தவர்கள் ஒருகாலம் பிறந்ததுண்டோ எழிலான வுலகுதனில் மெய்யோபொய்யோ
நிரந்தரமாய் தேசமதில் எவரானாலும் தீர்க்கமுடன் சாகாமலிருப்பேனென்று
அறமென்ற மெய்பொருளை கண்டாராய்ந்து வப்பனே யந்தநிலை கண்டுபோற்றே

விளக்கவுரை :


4264. போற்றவே யின்னமொரு கருமானங்கேள் புகழான புலிப்பாணி மைந்தாகேளு
ஏற்றவே பதினெண்பேர் சித்தர்தன்னில் எழிலான ரோமரிஷி யென்னுஞ்சித்து
நாற்றிசையும் மெச்சுதற்கு யோகவானாம் நலமான ரோமபுரி யென்னும்நாடு
மேற்புறமாம் வடகோடிகானகத்தில் மேதினியில் தான்பிறந்த சித்துமாமே

விளக்கவுரை :


4265. தானான சித்தர்முனி வெகுகாலந்தான் தகமையுடன் ரோமபுரி பதியிலப்பா
தேனான செங்கழுனி தீர்த்தந்தன்னில் சிறப்புடனே வெகுகாலமிருந்தாரங்கே
மானான ரிஷியாரும் மலைமீதிற்தான் மகத்தான வாதவித்தை செய்வதற்கு
வூனான பட்சியின்தன் வாதவித்தை வுத்தமனே செய்தாரே கோடியாமே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 4256 - 4260 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4256. அதிதமாங் காயமது நிலைநில்லாது அவனியிலே யிருந்தவர்கள் யாருமில்லை
பதிதமாம் லோகத்தின் வாழ்க்கையெல்லாம் பாங்கான பொய்வாழ்வு மெய்யேயல்ல
துதிதமுடன் லோகமதிலிருந்தோரில்லை துப்புறவாய் சடலமது வழியும்பாரு
நதிதமுடன் தேறைய முனிவர்தானும் நயமுடனே தாமுரைத்தார் வுண்மைபாரே

விளக்கவுரை :


4257. பாரப்பா புலிப்பாணி மைந்தாகேளு பகருகிறேன் தேறையசித்துதம்மை
ஆரப்பா வுலகுதனில் தேறைபோலும் வப்பனே வதிசயங்கள் மகிமைகொண்டோர்
நேரப்பா வுலகுதனிலிருந்தசித்து நேர்மையுடன் கண்டவர்கள் இவர்போலுண்டோ
தீரப்பா காயாதிகொண்ட சித்து திறமுடைய தங்கமென்ற சித்துதாமே

விளக்கவுரை :

[ads-post]

4258. தங்கமாஞ் சித்தர்களில் இவர்கீடுண்டோ தாரிணியில் காயாதிகொண்டசித்து
புங்கமாஞ் சித்துயெட்டு கொண்டசித்து புகழான மூலிவகையறிந்தசித்து
தங்கமாம் மாண்டவரை எழுப்புஞ்சித்து துரைகோடி வரைகோடி யறிந்தசித்து
சிங்கமாம் பதினெண்பேர் சித்துதன்னில் சீர்மிகு வகஸ்தியர்க்கு உகந்தசித்தே

விளக்கவுரை :


4259. சித்தான தேறையர் முனிவர்தானும் சீரான வுலகுதனிலிருந்தாரேதான்
முத்தான தேகமதை மறந்தாரேதான் மூதுலகு வாசைதனை விட்டார்பாரு
பத்தான பரமரிஷியெவரானாலும் பாருலகில் இருந்தவர்களா யாருமில்லை
சுத்தமுடன் சைதன்னியவாசைவிட்டு சுகமுடனே தவநிலையில் இருக்கநன்றே

விளக்கவுரை :


4260. நன்றான தவநிலையிலிருந்துகொண்டு நாதாக்கள் என்றல்லோ பெயருங்கொண்டு
குன்றான தேகமது குகைகள்தேடி கூறுபிலந்தனிலொளித்து முனிவரெல்லாம்
வென்றிடவே வெட்டவெளி தன்னிற்சென்று விருப்பமுடன் சமாதியது பூண்டுமல்லோ
மன்றிடவே பாரினிலே யின்னுமேதிய பாராமறிந்து காயமதை யொழித்திட்டாரே  

விளக்கவுரை :


Powered by Blogger.