4256. அதிதமாங் காயமது
நிலைநில்லாது அவனியிலே யிருந்தவர்கள் யாருமில்லை
பதிதமாம் லோகத்தின்
வாழ்க்கையெல்லாம் பாங்கான பொய்வாழ்வு மெய்யேயல்ல
துதிதமுடன்
லோகமதிலிருந்தோரில்லை துப்புறவாய் சடலமது வழியும்பாரு
நதிதமுடன் தேறைய
முனிவர்தானும் நயமுடனே தாமுரைத்தார் வுண்மைபாரே
விளக்கவுரை :
4257. பாரப்பா புலிப்பாணி மைந்தாகேளு பகருகிறேன் தேறையசித்துதம்மை
ஆரப்பா வுலகுதனில்
தேறைபோலும் வப்பனே வதிசயங்கள் மகிமைகொண்டோர்
நேரப்பா
வுலகுதனிலிருந்தசித்து நேர்மையுடன் கண்டவர்கள் இவர்போலுண்டோ
தீரப்பா காயாதிகொண்ட சித்து
திறமுடைய தங்கமென்ற சித்துதாமே
விளக்கவுரை :
[ads-post]
4258. தங்கமாஞ் சித்தர்களில்
இவர்கீடுண்டோ தாரிணியில் காயாதிகொண்டசித்து
புங்கமாஞ் சித்துயெட்டு
கொண்டசித்து புகழான மூலிவகையறிந்தசித்து
தங்கமாம் மாண்டவரை
எழுப்புஞ்சித்து துரைகோடி வரைகோடி யறிந்தசித்து
சிங்கமாம் பதினெண்பேர்
சித்துதன்னில் சீர்மிகு வகஸ்தியர்க்கு உகந்தசித்தே
விளக்கவுரை :
4259. சித்தான தேறையர்
முனிவர்தானும் சீரான வுலகுதனிலிருந்தாரேதான்
முத்தான தேகமதை மறந்தாரேதான்
மூதுலகு வாசைதனை விட்டார்பாரு
பத்தான பரமரிஷியெவரானாலும்
பாருலகில் இருந்தவர்களா யாருமில்லை
சுத்தமுடன்
சைதன்னியவாசைவிட்டு சுகமுடனே தவநிலையில் இருக்கநன்றே
விளக்கவுரை :
4260. நன்றான
தவநிலையிலிருந்துகொண்டு நாதாக்கள் என்றல்லோ பெயருங்கொண்டு
குன்றான தேகமது குகைகள்தேடி
கூறுபிலந்தனிலொளித்து முனிவரெல்லாம்
வென்றிடவே வெட்டவெளி
தன்னிற்சென்று விருப்பமுடன் சமாதியது பூண்டுமல்லோ
மன்றிடவே பாரினிலே
யின்னுமேதிய பாராமறிந்து காயமதை யொழித்திட்டாரே
விளக்கவுரை :