4261. ஒழித்தாரே சித்தரெல்லாம்
இந்தமார்க்கம் ஓகோகோ நாதாக்களெல்லாருந்தான்
வழியுடனே
வையகத்தைத்தான்மறந்து வல்லான வுயிர்தனையே போக்கடித்தார்
பழியுடனே கல்லான தேகந்தன்னை
பான்மைபெற பாரினிலே யொழித்துப்போட்டார்
அழியான
வையகத்திலொருவருந்தான் வப்பனே வையகத்தில்லைதானே
விளக்கவுரை :
4262. தானான தத்துவங்கள்
அதிகஞ்சொல்லி தட்டழிந்து போகுமிந்த காயமப்பா
கானான குருவென்ற
சொன்னசித்தும் குவலயத்தை தான்மறந்து சென்றாரப்பா
தேனான மனோன்மணியாள்
வரமும்பெற்று தேசத்தில் இருந்தசித்தும்போனாரப்பா
பானான பரமருட பாதங்காண
பாருலகில் எல்லோரும் பிறந்தார்தாமே
விளக்கவுரை :
[ads-post]
4263. பிறந்தவரு
மொருகாலமிருந்ததுண்டோ பேருலகில் வாக்கியமும் மெய்யோபொய்யோ
இறந்தவர்கள் ஒருகாலம்
பிறந்ததுண்டோ எழிலான வுலகுதனில் மெய்யோபொய்யோ
நிரந்தரமாய் தேசமதில்
எவரானாலும் தீர்க்கமுடன் சாகாமலிருப்பேனென்று
அறமென்ற மெய்பொருளை
கண்டாராய்ந்து வப்பனே யந்தநிலை கண்டுபோற்றே
விளக்கவுரை :
4264. போற்றவே யின்னமொரு
கருமானங்கேள் புகழான புலிப்பாணி மைந்தாகேளு
ஏற்றவே பதினெண்பேர்
சித்தர்தன்னில் எழிலான ரோமரிஷி யென்னுஞ்சித்து
நாற்றிசையும் மெச்சுதற்கு
யோகவானாம் நலமான ரோமபுரி யென்னும்நாடு
மேற்புறமாம்
வடகோடிகானகத்தில் மேதினியில் தான்பிறந்த சித்துமாமே
விளக்கவுரை :
4265. தானான சித்தர்முனி வெகுகாலந்தான் தகமையுடன் ரோமபுரி பதியிலப்பா
தேனான செங்கழுனி
தீர்த்தந்தன்னில் சிறப்புடனே வெகுகாலமிருந்தாரங்கே
மானான ரிஷியாரும்
மலைமீதிற்தான் மகத்தான வாதவித்தை செய்வதற்கு
வூனான பட்சியின்தன்
வாதவித்தை வுத்தமனே செய்தாரே கோடியாமே
விளக்கவுரை :