4266. கோடியாஞ் சாதியென்ற
சேவல்தானும் கொற்றவனாம் ரோமரிஷி கானகத்தில்
தேடியே பெருஞ்சாதி
சேவல்தன்னை தெளிவுடனே கண்டல்லோ வாராய்ந்தேதான்
நீடியே கெந்தகமும் பலந்தான்
பத்து நேர்மையுடன் பருங்குறுவை யரிசிநேராம்
சூடியே குழிக்கல்லில்
தன்னிலிட்டு துப்புறவாய் தானரைப்பாய் சாமம்நாலே
விளக்கவுரை :
4267. நாலான சாமமது மேதிப்பாலால் நலம்பெறவேதானரைப்பாய்
நாலுசாமம்
சீலமுடன் மாவதனை
திரட்டியேதான் சிறப்பான சேவலுக்கு வுணவுயீய
கோலமுடன் சேவலதுவுண்டபின்பு
கொற்றவனே குகைக்குள்ளே யடைத்துமேதான்
பாலமுர்தமுண்டபின்பு
பட்சிதன்னை பான்மையுடன் தானமைத்தார் குகையினுள்ளே
விளக்கவுரை :
[ads-post]
4268. உள்ளான குகைதனிலே நாலாவட்டம்
வுத்தமனே செவலுக்கு வுணவுதந்து
எள்ளளவும் எச்சமது
வெளியேகாமல் யெழிலாகத் தான்சேர்த்துக்காயப்போடு
தெள்ளமிர்தமானதொரு காரமிட்டு
தெளிவாக மூசையிட்டுச் சீலைசெய்து
கள்ளமின்றி ரவிதனிலே
காயவைத்து கலங்காமல் மூசைதனை ஊதிடாயே
விளக்கவுரை :
4269. ஊதவென்றால் சரவுலையில்
வைத்துவூது வுத்தமனே தீயாறி எடுத்துப்பாரு
நீதமுடன் மூசைதனை
யுடைத்துப்பார்க்க நிலைத்துதடா கெந்தியென்ற செம்புமாச்சு
தோதமுடன் செம்புதனை
எடுத்துக்கொண்டு தோராமல் மறுபடியும் பொடித்துமேதான்
சாதமுடன் கெந்தியது
பொடியைச்சேர்த்து சட்டமுடன் சேவலுக்குக் கொடுத்திடாயே
விளக்கவுரை :
4270. கொடுக்கவென்றால் சேவலுக்கு
முன்போல்செய்து குகைதனிலே தானெடுத்து எச்சந்தன்னை
தடுக்காமல் முன்போலே
வுருக்கித்தீரு சட்டமுடன் செம்பதுவும் தங்கச்செம்பாம்
வடுவான செம்பதுவும்
எடுத்துக்கொண்டு வண்மையுள்ள மதிதனிலே பத்துக்கொன்று
நடுவான
மூசைதனையுருக்கிக்கொண்டு நன்மையுடன் கொடுத்திடவே மாற்றெட்டாமே
விளக்கவுரை :