4251. நிற்கையிலே மனோன்மணியால்
கிருபையாலே நீடான வசரீரிகேட்கும்பாரு
அற்பமென்று நினையாதே
வன்பாகேளு அவனியிலே நான்வருகுங்காலந்தன்னில்
சிற்பரன்போலுந்தனுக்கு
சொற்பனங்கள் சீராகத் தானடக்கும் வருள்மைந்தாகேள்
உற்பமுடன் சொற்பனத்தில்
நான்வந்தாற்போல் வுத்தமனே வதிசயங்கள் நடக்குந்தானே
விளக்கவுரை :
4252. தானான லோகமது இருண்டுபோகும்
தாக்கான கடலதுதான் பொங்கும்பாரு
மோனான நாதாக்கள்
இறந்தபேர்கள் மோனமென்ற சமாதியது யொளிக்கும்பாரு
தேனான மனோன்மணியாள்
கடாட்சத்தாலே தெளிவாகக் கண்ணின்முன் நிற்பார்பாரு
பானான நாலுயுக வதிசயங்கள்
பட்சமுடன் தாமுரைப்பார் சித்தர்தாமே
விளக்கவுரை :
[ads-post]
4253. சித்தான தேறையர்
முனிவர்தானும் சிறப்புடனே கூறலுற்றார் இந்தவண்ணம்
பத்தான ரிஷியாருஞ்
சமாதிவிட்டு பட்சமுடன் தானடக்க வழியுஞ்சொல்வார்
முத்தான தேகமதை வுலகிற்காண
முனியான தேறையர் சமாதிதானும்
புத்தான பாறையதுதான்வெடித்து
புகழாகச் சமாதிவட்டு வெளிவந்தாரே
விளக்கவுரை :
4254. வெளியாக சித்துமுனி வந்தபோது
வெற்றிபெற சீஷருக்குத்தானுரைப்பார்
தெளிவான சாஸ்திரங்கள்
கற்றுமென்ன தேகாதி காயகற்பங்கொண்டுமென்ன
பளியான தேகமதை வையகத்தில்
பட்சமுடன் காப்பாற்றி நிறுத்தியென்ன
குளியான சமாதியிடஞ்
சென்றுமென்ன குவலயத்திலிருந்தாலும் ஒன்றுங்காணே
விளக்கவுரை :
4255. காணேனே பஞ்சபூதத்தினாசை
கடிதான தேகமது நிலைநில்லாது
பூணவே வரைகோடி யிருந்துமென்ன
பூவுலகில் சடலமது வழிந்துபோகும்
தோணவே யில்லாவே யிடுகாடாகும்
துப்புறவாய் சொந்தநகர் புறங்காடாகும்
மாணவே வையகத்தினாசையெல்லாம்
மறப்பதுவே வண்மையுள்ள வதிதமாமே
விளக்கவுரை :