4246. பெற்றேனே மறுபடியுஞ்
சமாதியேக பெருமையுடன் இருபதுவாண்டுமட்டும்
கற்பறிந்தேன்
ஞானோபதேசங்கேட்டு காசினியில் ஆசையற்றுசமாதிபூண
சிற்றறிவு வுடையதொரு
பாலன்யானும் சீராக சமாதிக்குப் பாத்திரனாவாய்
குற்றமில்லா வரைகடந்து
யடியேன்யானும் குருபதத்தை நாடியல்லோ வந்திட்டேனே
விளக்கவுரை :
4247. வந்தேனே சீஷவர்க்கந்
தன்னோடொக்க வகையான நர்மதா மலையைத்தேடி
அந்தமுடன் சமாதிக்கு
இடமுங்கண்டார் வன்பான சீஷவர்க்கமான பேர்கள்
சொந்தமதாய்க் குழிதோண்டுஞ்
சமாதிதன்னை கந்தாரே தாயிருக்கக் கண்டேன்யானும்
முந்தவே
யான்கண்டசொற்பனம்போல் முடிந்துதே விட்டகுறை வாய்க்கலாச்சே
விளக்கவுரை :
[ads-post]
4248. ஆச்சென்று தேறையசித்துதாமும்
வன்பாக ரிஷியார்க்குத் தாமுரைக்க
மூச்சடங்கி சிலகாலம்
எந்தன்பக்கல் முடிவான வாண்டுவரு முடிவுமட்டும்
வீச்சுடனே சமாதியது
யிருக்கவென்று விருப்பமுடன் ரிஷியாரும் வாக்களித்தார்
பாச்சலென்ற சுவாசமது
தானடக்கி பட்சமுடன் தானிருக்க வரந்தந்தாரே
விளக்கவுரை :
4249. வரமுடனே தான்கொடுத்து ரிஷியார்தாமும் வண்மையுடன் ஆசீர்மஞ்சொன்னாரங்கே
சரமுடைய வார்த்தையென்ற
மொழிக்கித்தானும் தப்பாமல் சமாதிக்குள் சென்றாரங்கே
திறமுடைய தேறையர்
சித்துதாமும் தீர்க்கமுடன் சீஷருக்கு வோதலுற்றார்
குறமுடைய ரிஷியாரும்
சீஷருக்கு கூறுவார் அதிசயங்கள் மிகவாய்த்தானே
விளக்கவுரை :
4250. தானேதான் சமாதியது பூண்டபோது
தகமையுள்ள வசரீரி வாக்குண்டாம்
மானேதான் சீஷவர்க்கம்
மாண்பாகேளு மகிழ்ச்சியுடன் சமாதிதனிலிருக்கும்போது
தேனேதான் சிவயோக
நிலையில்நின்று தேற்றமுடன் மேதினியில் வருவதற்கு
மானேதான் வதிசயங்கள்
மிகநடக்கும் மகத்தான சமாதியிடம் பக்கல்நில்லே
விளக்கவுரை :