4241. ஆச்சப்பா புலிப்பாணியின்னங்கேளு வப்பனே தேறையர் சென்றபோது
மூச்சடங்கி வெகுகாலஞ்
சென்றசித்து மூதுலகைக் கடந்ததொரு சித்துமாச்சு
மாச்சலுடன் பூமிதனில்
ஓராள்மட்டம் மண்ணதனை வாரியல்லோகண்டபோது
பாச்சலுடன் பூமிதனில்
நிலங்களெல்லாம் பாதாளநீர்மட்டும் வுருகலாச்சே
விளக்கவுரை :
4242. உருகவே நீர்மட்டம்
நிலங்களெல்லாம் வூருருகத்தான் பாய்ந்துமே வேர்கள்போல
பெருகவே சடைமுடியுந்
தம்பிரான்போல் பேரான சமாதிதனிலிருந்தார்தாமும்
வருகலுடன்
கண்மூடிசித்துதாமும் வண்மையுடன் சமாதிதனிலிருக்கக் கண்டார்
சருகலுடன் ரிஷியாரும்
பூமிதன்னில் சட்டமுடன் தானிருக்கக் கண்டார்பாரே
விளக்கவுரை :
[ads-post]
4243. பாரேதான் தேறையமுனிவர்தாமும்
பண்மையுடன் சமாதிதனிலிருந்துகொண்டு
தீரமுடன் தேறையமுனிவர்தம்மை
திறமுடனே யாரென்று கேட்கும்போது
சேரேதான் சித்துமுனி
ரிஷியைப்பார்த்து சிறப்புடனே தாமுரைப்பார் முனிவர்தாமும்
நேரேதான் அகஸ்தியனார்
சீஷரென்றார் நேர்மையுடன் தேறையமுனிவர்தானே
விளக்கவுரை :
4244. தானான தேறைய முனிவர்தானும்
தகமையுடன் ரிஷியஅர்க்கு விடையுஞ்சொன்னார்
கோனான கும்பமுனி
கடாட்சத்தாலே குவலயத்தில் வெகுகோடி மகிமைதன்னை
தேனான மனோன்மணியாள்
அருளினாலே தேசமதில் அதிதமிகக்கண்டேன்யானும்
மோனான தேறையமுனிவர்தானும்
மோதவே யடிபணிந்து துதித்திட்டாரே
விளக்கவுரை :
4245. துதித்தாரே
தேறையமுனிவர்தானும் துப்புறவாய் அடிவணங்கி தெண்டனிட்டு
கதிப்புடனே
காயகற்பங்கொண்டுயானும் காசினியில் வெகுகோடி காலந்தானும்
மதிப்புடனே சமாதிமுகம்
சென்றுயானும் மகதேவர் தசவருஷம் யிருந்தேன்யானும்
விதிப்பயனாம் அமைப்பின்படி
பின்னுமல்லோ வேதாந்தத் தாயினது வருள்பெற்றேனே
விளக்கவுரை :