4236. உண்மையாம் சொற்பனமும்
கண்டேனப்பா ஓகோகோ நாதாக்களுக் குகந்தசீஷர்
வண்மையாம் சமாதிக்குப்
போனாப்போலும் வடப்புடனே யிருபதுவாண்டிருப்பனென்றும்
கண்மையாம் மனோன்மணியாள்
கடாட்சத்தாலே கண்டேனே சொற்பனங்கள் உண்மையாக
திண்மையாஞ் சமாதிக்குப்
போனாற்போலும் திறமான வதிசயங்கள் பார்த்திட்டேனே
விளக்கவுரை :
4237. பார்த்தேனே சமாதிக்குச்
செல்லும்போது பாங்கான வெகுகாலஞ் சென்றசித்து
நேர்த்தியுடன் பூமிதனில்
சமாதிபூண சேர்மையுடன் சீஷர்களுமொன்றாய்கூட்டி
பூர்த்தியுடன் குழிதோண்ட
போனபோது புகழான சித்தொருவரங்கிருந்தாப்போலும்
பார்த்திடவே பிரகாசமான ஜோதி
மகத்தான சித்தொருவர் கண்டேன்தானே
விளக்கவுரை :
[ads-post]
4238. தானான சொற்பனங்கள்
கண்டேனப்பா தண்மையுள்ள சீஷர்களே என்னசொல்வேன்
கோனான எனதையர் அகஸ்தியர்போல்
கொற்றவனார் சித்தொருவர் கண்டேனங்கே
கோனான மனோன்மணியாள்
கடாட்சத்தாலே தெளிவுடனே கண்விழித்துப் பார்க்கும்போது
மானான சொற்பனத்தில்
கண்டாப்போல மன்னவனே கண்விழிக்கி லொன்றுங்காணே
விளக்கவுரை :
4239. காணேனே சொற்பனத்தில்
சித்துதாமும் கைலாசநாதருட ஜோதிப்போல்தான்
வூணவே நினைவதுதான்
கினவுமாச்சோ பொங்குமுன் சொற்பனமும் மெய்யோபொய்யோ
தோணவே எந்தனுக்கு ஒன்றுங்காணேன்
துரைராஜசுந்தரனே மகிமையேதோ
மாணவே
மறுபடியுஞ்சித்துதாமும் மகத்தான சமாதிக்கு ஏகினாரே
விளக்கவுரை :
4240. ஏகினார் சீஷவர்க்க
மனேகம்பேர்கள் எழிலான கூட்டமுடன் ஏகியல்லோ
சாகமுடன் நர்மதா
மலைக்குமேற்கே சட்டமுடன் சமாதிக்கு சென்றுமல்லோ
வேகமுடன் சமாதியது
தோண்டும்போது மேன்மையுள்ள சித்தொருவர் அங்கிருந்தார்
போகமுடன் சித்தொருவர்
தன்னைக்கண்டார் யொளியான பிரகாசந்தோன்றலாச்சே
விளக்கவுரை :