போகர் சப்தகாண்டம் 4361 - 4365 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4361. வாழ்கவென்றால் லோகமெல்லாங் குளிகைகொண்டு வளமுடனே சத்தசாகரமுங்கண்டேன்
தாழ்கவே அஷ்டதிசை தானுங்கண்டீர் தாக்கான மலையாறு குகைகள்கண்டேன்
மூழ்கியதோர் பிரளயங்கள் எல்லாங்கண்டேன் மூதுலகவையகத்தின் வாழ்க்கைக்கண்டேன்
மாழ்கியே போகாமல் சிலதுகாலம் மார்க்கமுடன் இருக்கவென்று வரந்தந்தாரே

விளக்கவுரை :


4362. தந்தாரே சமாதிக்குப் போரேனப்பா தண்மையுடன் சிலகாலமிருந்துயானும்
அந்தமுடன் வுலகுதனில் வருகும்போது அப்பனே உந்தனையுங் காண்பேனென்று
சிந்தனையில் அவர்மீது பட்சம்வைத்து சிறப்புடனே விடையதுவும் பெற்றுக்கொண்டு
சொந்தமுடன் சீஷர்பதிக் கூட்டத்தோடு சத்தமுடன் சமாதிக்கு ஏகினாரே

விளக்கவுரை :

[ads-post]

4363. ஏகவே சீஷவர்க்கந் தனையழைத்து எழிலான காட்டகத்தைச் சென்றுயானும்
சாங்கமுடன் சமாதிக்கு யிடமுந்தேடி சட்டமுடன் குழியதுவுந்தோண்டியேதான்
வேகமுடன் ஓராளின் மட்டங்கீழே விருப்பமுடன் கல்லரை கழண்டுசெய்து
தாகமுடன் பாலமுர்தம் உண்பதற்கு சட்டமுடன் தானுழைய வழிவைத்தாரே

விளக்கவுரை :


4364. வழியான சமாதிக்கு திட்டவகூறி வண்மையுடன் கடுவெளியார் சீஷருக்கு
பழிபாவந் தனைநீக்கி சித்துதாமும் பட்சமுடன் வுபதேசஞ் செய்தாரங்கே  
குழியான சமாதிக்குப் போகும்போது கொப்பெனவே எந்தனுக்கு மண்டலந்தான்
வழியோடே பால்பழமும் யெனக்குத்தந்து வண்மையுடன் சமாதிதனை மூடிப்போடே

விளக்கவுரை :


4365. போடேதான் மண்ணதனை மேலேமூடி பொங்கமுடன் கல்லாலே சமாதிகட்டி
நீடேதான் இருபது வாண்டுமட்டும் நிலையாக சமாதியிடங் கார்த்திருந்து
தேடவே சமாதியது வெடிக்கும்போது தேற்றமுடன் ஏவலுக்கு முன்னேநின்று
பாடவே யுபதேசம் மிகவும்பெற்று பாரினிலே வெகுகாலம் வாழ்குவீரே  

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 4356 - 4360 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4356. எழுந்தாரே கடுவெளியார் சித்தர்தாமும் எழிலான சமாதிக்கு ஏகவென்று
அழுந்தியே பூமிதன்னில் வெகுகாலந்தான் அடக்கமதாய் தானிருக்க எண்ணங்கொண்டு
பழுதுபடா திருமேனி போகர்தம்மை பட்சமுடன் தாமழைத்து சித்துதாமும்  
வழுதுணையாய் வெகுகால மிருக்கவென்று வண்ணமுடன் வரமதுவும் கொடுத்தார்தானே

விளக்கவுரை :


4357. கொடுத்துமே காலாங்கி சீடருக்கு கொப்பெனவே புத்திமதி யதிகஞ்சொல்லி
அடுத்துமே கண்மணியே போகநாதா அவனியெலாம் குளிகைகொண்டு சுத்திவந்தாய்
தொடுத்ததொரு பூமிவள மனேகமுண்டு தொல்லுலகில் கானகத்தில் சபிக்குஞ்சித்து
ஒடுக்கமுடன் தான்சபிப்பார் போகநாதா ஓகோகோ நாதாக்கள் அதிதங்காணே   

விளக்கவுரை :

[ads-post]

4358. காணவே சமாதிக்குப்போறேனப்பா காசினியில் யார்பகையுங் கொள்ளவேண்டாம்
வீணவே சித்துமகா கோடியுண்டு விருதுடனே மடிபிடித்து சண்டைசெய்வார்
மாணமருங் கல்வியுள்ளோர் போலேபேசி மகத்தான நாதவொளி சித்தன்போலே
நீணவே யுந்தனிட கரங்கள் வைத்து நீடான யுலகமதில் செய்வார்பாரே

விளக்கவுரை :


4359. பார்க்கையிலே நல்லவர்போல் பொல்லாரப்பா பாருலகில் சித்தருண்டு ரிஷியுமுண்டு
ஏர்க்கவே நல்லாவின் படத்தைப்போலே எழிலான நாதாக்கள் முனிவருண்டு
பூர்க்கவே படமதனில் விடத்தைக்காணார் புகழான படமதும் அழகாய்த்தோன்றும்
ஏர்க்கவே கதைபோல முடியுமப்பா எழிலான சித்தர்களை நம்பொண்ணாதே

விளக்கவுரை :


4360. ஒண்ணாது வுலகிலுள்ள சித்தரப்பா ஓகோகோ தர்மிகளுங் கருமியுண்டு
எண்ணவே முடியாது எவராலுந்தான் எழிலான சித்தர்முனி மர்மமப்பா
கண்ணபிரான் ஒருநாளும் சிக்கிக்கொண்டு காசினியில் அவர்வலையை நீக்கிக்கொள்வார்
நண்ணவே எப்போதும் போகநாதா நண்புடனே தர்க்கிட்டு வாழ்குவீரே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 4351 - 4355 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4351. வழியான கதண்டுகளும் எந்தன்மீதில் வண்மையுடன் மனதுவந்து எந்தனைத்தான்
பழியதுவும் நேராமல் எந்தன்மீதில் பட்சமுடன் கதண்டுரிஷி வலுமையாலே   
குழியான குண்ணுக்கல் கானார்தம்மில் கொற்றவனே யெனையழைத்துப்போகலாச்சு
அழியாத வாசனங்கள் எந்தனுக்கு வன்புடனே கொடுத்தார் பணியலாச்சே

விளக்கவுரை :


4352. பணியவே பவளமென்ற வாசீர்மத்தில் பாங்குடனே யடியேனும் வீற்றிருந்தேன்
துணிவுடனே கதண்டுமகாகூட்டத்தோடு துப்புரவாய் யெந்தனுக்கு வாசீர்மித்து
அணியணியாய் கதண்டுகளுங் கூட்டங்கூடி அங்ஙனவே எந்தனுக்கு வதிதஞ்சொல்லி
மணியான பவளமென்ற  மாலைதன்னை மார்க்கமுடன் எந்தனுக்குக் கொடுக்கலாச்சே

விளக்கவுரை :

[ads-post]

4353. கொடுக்கவே யடியேனும் பவளம்பூண்டு கொப்பெனவே குளிகையது பூண்டுகொண்டு
விடுபட்டு சீனபதி வந்தேன்யானும் விட்டகுறை யிருந்ததொரு வலுமையாலே
தொடுகுறிபோல் பவளமென்ற காட்டகத்தை தொல்லுலகில் வாரிதியைக் கண்டுவந்தேன்
கடுவெளியாஞ் சித்தருட கடாட்சத்தாலே கனமுடனே சீனபதிவந்திட்டேனே

விளக்கவுரை :


4354. வந்தேனே சீனபதி மாண்பரேகேள் வகுப்பான பவளமென்ற காட்டகத்தை
அந்தமுடன் யான்கண்டு பவளம்பூண்டு யன்புடனே யுந்தனுக்காய் உபதேசிக்க
சொந்தமுடன் எந்நாளும் அனுவுபூண்டு சுத்தமுடன் நீங்களெல்லாம் தேறுதற்கு
விந்தைகளை யுந்தனுக்குக் கூறவந்தேன் விருப்பமுடன் கண்டுகொள்ளு மென்றிட்டாரே

விளக்கவுரை :


4355. என்றிட்ட போகமுனி ரிஷியார்தாமும் எழிலான சீனபதி விட்டுமல்லோ
குன்றிட்ட குளிகையதை பூண்டுகொண்டு கொப்பெனவே வடகோடி யாசீர்மத்தில்
தன்றிட்ட மாகவல்லோ தரணிமீதில் சாங்கமுடன் குளிகைகொண்டு இறங்கினேன்யான்
சென்றிட்ட வடகோடி கானகத்தில் சேனையுடன் சீஷவர்க்கம் எழுந்திட்டாரே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 4346 - 4350 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4346. சொன்னாரே கதண்டுமகா ரிஷியாருக்கு தோற்றமுடன் எந்தனுக்கு அடவிதன்னை
பொன்னான பவளமது விளையுமார்க்கம் பொங்கமுடன் எந்தனுக்கு அருளவென்று
மன்னவனாம் கதண்டுமகாரிஷியாருக்கு மார்க்கமுடன் உறுதிமனங்கொள்வதற்கு
வின்னமது வாராமல் எந்தன்மீதில் விருப்பமுடன் பட்சமது விடைதந்தாரே

விளக்கவுரை :


4347. தந்தாரே கதண்டுமகாரிஷியார்தாமும் தாரிணியில் காலாங்கி சீஷனென்று
எந்தன்மேல் கிருபைவைத்து மனதுவந்து எழிலான பவளமென்ற கானகத்தை
அந்தமுடன் எந்தனுக்கு தெரியவேதான் வன்புள்ள கதண்டுகளை தாமழைத்து
இன்பமுடன் காண்பிக்க சொல்லியேதான் இனிமையுடன் உத்தாரஞ் செய்தார்பாரே

விளக்கவுரை :

[ads-post]

4348. பாரேதான் வுத்தாரஞ்செய்தபின்பு பாங்கான கானகத்தில் கதண்டுதானும்
நேரேதான் வடகோடி கானகத்தில் நேர்மையுடன் கதண்டுகளும் காணலாச்சு
சீரேதான் யானைகளின் தலைகள்போலே சிறியதோர் கதண்டுகளைக் கண்டேன்யானும்
வீரேதான் கதண்டுகட்கு மெத்தவுண்டு விண்ணிலிடங் கொள்ளாது பயந்திட்டேனே

விளக்கவுரை :


4349. இட்டேனே யானையது தலைகள்போல யெழிலான கதண்டுகளு மெத்தவுண்டு
பட்டதொரு சிங்கத்தின் தலைகள்போலே பாங்கான கதண்டுகளு மெத்தவுண்டு
துட்டமுள்ள குதிரையது தலைகள்போலே தூரான கதண்டுகளைக் கண்டேன்யானும்
விட்டகுறை யிருந்ததினால் எந்தனுக்கு வினையதுவும் தொடராமல் வந்தஇட்டேனே

விளக்கவுரை :


4350. வந்தேனே கதண்டுமகாரிஷியார் பக்கல் வடக்குமுகம் பின்புறமாய் நின்றுகொண்டேன்
சொந்தமுடன் அவர்பாதம் தொழுதுயானும் துரைராசர் பக்கமதில் நின்றுகொண்டு
அந்தமுடன் கிங்குவித்து வஞ்சலித்து வன்புடனே தொழுதுபணி நிற்கும்போது
விந்தையுடன் கதண்டுமகாரிஷியார்தாமும் விருப்பமுடன் எந்தனுக்கு வழிசொன்னாரே

விளக்கவுரை :


Powered by Blogger.