4351. வழியான கதண்டுகளும்
எந்தன்மீதில் வண்மையுடன் மனதுவந்து எந்தனைத்தான்
பழியதுவும் நேராமல்
எந்தன்மீதில் பட்சமுடன் கதண்டுரிஷி வலுமையாலே
குழியான குண்ணுக்கல்
கானார்தம்மில் கொற்றவனே யெனையழைத்துப்போகலாச்சு
அழியாத வாசனங்கள் எந்தனுக்கு
வன்புடனே கொடுத்தார் பணியலாச்சே
விளக்கவுரை :
4352. பணியவே பவளமென்ற
வாசீர்மத்தில் பாங்குடனே யடியேனும் வீற்றிருந்தேன்
துணிவுடனே
கதண்டுமகாகூட்டத்தோடு துப்புரவாய் யெந்தனுக்கு வாசீர்மித்து
அணியணியாய் கதண்டுகளுங்
கூட்டங்கூடி அங்ஙனவே எந்தனுக்கு வதிதஞ்சொல்லி
மணியான பவளமென்ற மாலைதன்னை மார்க்கமுடன் எந்தனுக்குக்
கொடுக்கலாச்சே
விளக்கவுரை :
[ads-post]
4353. கொடுக்கவே யடியேனும்
பவளம்பூண்டு கொப்பெனவே குளிகையது பூண்டுகொண்டு
விடுபட்டு சீனபதி
வந்தேன்யானும் விட்டகுறை யிருந்ததொரு வலுமையாலே
தொடுகுறிபோல் பவளமென்ற
காட்டகத்தை தொல்லுலகில் வாரிதியைக் கண்டுவந்தேன்
கடுவெளியாஞ் சித்தருட
கடாட்சத்தாலே கனமுடனே சீனபதிவந்திட்டேனே
விளக்கவுரை :
4354. வந்தேனே சீனபதி மாண்பரேகேள்
வகுப்பான பவளமென்ற காட்டகத்தை
அந்தமுடன் யான்கண்டு
பவளம்பூண்டு யன்புடனே யுந்தனுக்காய் உபதேசிக்க
சொந்தமுடன் எந்நாளும்
அனுவுபூண்டு சுத்தமுடன் நீங்களெல்லாம் தேறுதற்கு
விந்தைகளை யுந்தனுக்குக்
கூறவந்தேன் விருப்பமுடன் கண்டுகொள்ளு மென்றிட்டாரே
விளக்கவுரை :
4355. என்றிட்ட போகமுனி
ரிஷியார்தாமும் எழிலான சீனபதி விட்டுமல்லோ
குன்றிட்ட குளிகையதை
பூண்டுகொண்டு கொப்பெனவே வடகோடி யாசீர்மத்தில்
தன்றிட்ட மாகவல்லோ
தரணிமீதில் சாங்கமுடன் குளிகைகொண்டு இறங்கினேன்யான்
சென்றிட்ட வடகோடி கானகத்தில்
சேனையுடன் சீஷவர்க்கம் எழுந்திட்டாரே
விளக்கவுரை :