4356. எழுந்தாரே கடுவெளியார்
சித்தர்தாமும் எழிலான சமாதிக்கு ஏகவென்று
அழுந்தியே பூமிதன்னில்
வெகுகாலந்தான் அடக்கமதாய் தானிருக்க எண்ணங்கொண்டு
பழுதுபடா திருமேனி
போகர்தம்மை பட்சமுடன் தாமழைத்து சித்துதாமும்
வழுதுணையாய் வெகுகால
மிருக்கவென்று வண்ணமுடன் வரமதுவும் கொடுத்தார்தானே
விளக்கவுரை :
4357. கொடுத்துமே காலாங்கி சீடருக்கு கொப்பெனவே புத்திமதி யதிகஞ்சொல்லி
அடுத்துமே கண்மணியே போகநாதா
அவனியெலாம் குளிகைகொண்டு சுத்திவந்தாய்
தொடுத்ததொரு பூமிவள
மனேகமுண்டு தொல்லுலகில் கானகத்தில் சபிக்குஞ்சித்து
ஒடுக்கமுடன் தான்சபிப்பார்
போகநாதா ஓகோகோ நாதாக்கள் அதிதங்காணே
விளக்கவுரை :
[ads-post]
4358. காணவே சமாதிக்குப்போறேனப்பா
காசினியில் யார்பகையுங் கொள்ளவேண்டாம்
வீணவே சித்துமகா கோடியுண்டு
விருதுடனே மடிபிடித்து சண்டைசெய்வார்
மாணமருங் கல்வியுள்ளோர்
போலேபேசி மகத்தான நாதவொளி சித்தன்போலே
நீணவே யுந்தனிட கரங்கள்
வைத்து நீடான யுலகமதில் செய்வார்பாரே
விளக்கவுரை :
4359. பார்க்கையிலே நல்லவர்போல்
பொல்லாரப்பா பாருலகில் சித்தருண்டு ரிஷியுமுண்டு
ஏர்க்கவே நல்லாவின்
படத்தைப்போலே எழிலான நாதாக்கள் முனிவருண்டு
பூர்க்கவே படமதனில்
விடத்தைக்காணார் புகழான படமதும் அழகாய்த்தோன்றும்
ஏர்க்கவே கதைபோல முடியுமப்பா
எழிலான சித்தர்களை நம்பொண்ணாதே
விளக்கவுரை :
4360. ஒண்ணாது வுலகிலுள்ள
சித்தரப்பா ஓகோகோ தர்மிகளுங் கருமியுண்டு
எண்ணவே முடியாது
எவராலுந்தான் எழிலான சித்தர்முனி மர்மமப்பா
கண்ணபிரான் ஒருநாளும்
சிக்கிக்கொண்டு காசினியில் அவர்வலையை நீக்கிக்கொள்வார்
நண்ணவே எப்போதும் போகநாதா
நண்புடனே தர்க்கிட்டு வாழ்குவீரே
விளக்கவுரை :