போகர் சப்தகாண்டம் 4361 - 4365 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 4361 - 4365 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4361. வாழ்கவென்றால் லோகமெல்லாங் குளிகைகொண்டு வளமுடனே சத்தசாகரமுங்கண்டேன்
தாழ்கவே அஷ்டதிசை தானுங்கண்டீர் தாக்கான மலையாறு குகைகள்கண்டேன்
மூழ்கியதோர் பிரளயங்கள் எல்லாங்கண்டேன் மூதுலகவையகத்தின் வாழ்க்கைக்கண்டேன்
மாழ்கியே போகாமல் சிலதுகாலம் மார்க்கமுடன் இருக்கவென்று வரந்தந்தாரே

விளக்கவுரை :


4362. தந்தாரே சமாதிக்குப் போரேனப்பா தண்மையுடன் சிலகாலமிருந்துயானும்
அந்தமுடன் வுலகுதனில் வருகும்போது அப்பனே உந்தனையுங் காண்பேனென்று
சிந்தனையில் அவர்மீது பட்சம்வைத்து சிறப்புடனே விடையதுவும் பெற்றுக்கொண்டு
சொந்தமுடன் சீஷர்பதிக் கூட்டத்தோடு சத்தமுடன் சமாதிக்கு ஏகினாரே

விளக்கவுரை :

[ads-post]

4363. ஏகவே சீஷவர்க்கந் தனையழைத்து எழிலான காட்டகத்தைச் சென்றுயானும்
சாங்கமுடன் சமாதிக்கு யிடமுந்தேடி சட்டமுடன் குழியதுவுந்தோண்டியேதான்
வேகமுடன் ஓராளின் மட்டங்கீழே விருப்பமுடன் கல்லரை கழண்டுசெய்து
தாகமுடன் பாலமுர்தம் உண்பதற்கு சட்டமுடன் தானுழைய வழிவைத்தாரே

விளக்கவுரை :


4364. வழியான சமாதிக்கு திட்டவகூறி வண்மையுடன் கடுவெளியார் சீஷருக்கு
பழிபாவந் தனைநீக்கி சித்துதாமும் பட்சமுடன் வுபதேசஞ் செய்தாரங்கே  
குழியான சமாதிக்குப் போகும்போது கொப்பெனவே எந்தனுக்கு மண்டலந்தான்
வழியோடே பால்பழமும் யெனக்குத்தந்து வண்மையுடன் சமாதிதனை மூடிப்போடே

விளக்கவுரை :


4365. போடேதான் மண்ணதனை மேலேமூடி பொங்கமுடன் கல்லாலே சமாதிகட்டி
நீடேதான் இருபது வாண்டுமட்டும் நிலையாக சமாதியிடங் கார்த்திருந்து
தேடவே சமாதியது வெடிக்கும்போது தேற்றமுடன் ஏவலுக்கு முன்னேநின்று
பாடவே யுபதேசம் மிகவும்பெற்று பாரினிலே வெகுகாலம் வாழ்குவீரே  

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar