4366. வாழ்கவென்றால் சமாதிக்கு
சென்றபின்பு வையகத்தில் அதிசயங்கள் மிகநடக்கும்
தாழ்கவே சத்ருசங்காரரெல்லாம்
தாழ்மையுடன் நீதிவழிநடப்பார்பாரு
மீழ்கவே மிருகமெல்லாம்
பாஷைபேச மிக்கான பட்சியது வேதங்கூறும்
ஆழ்கவே கடலதுவும்
திசைமாறிப்போம் வப்பனே வதிசயங்கள் மெத்தவுண்டே
விளக்கவுரை :
4367. உண்டான சத்துருக்கள்
வணங்குவார்கள் ஓகோகோ நாதாக்களெல்லாங்கூடி
திண்டான சித்துவருங்
காலமாச்சு திகழான சமாதிவிட்டு ஏகவென்று
அண்டமது கிடுகிடுக்க
ரிஷிகளெல்லாம் வன்புடனே ஏவலுக்கு முன்னேநிற்பார்
வண்டினங்கள் கவிபாடுஞ்
சமாதிமுன்னே வருங்கால மாச்சுதென்று நினைத்துயக்கொள்ளே
விளக்கவுரை :
[ads-post]
4368. கொள்ளவே கெர்ப்பமது
குள்ளிருக்கும் கூறான சிசுபாலன் வார்த்தைகூறும்
விள்ளவே பரிதிமதி
திசைமாறிப்போம் வீரான கஆட்களுமதிரும்பாரு
துள்ளவே ஆதிசேடன்
பூமிதன்னில் துடிப்புடனே தோள்மாற்றி நடுங்கச்செய்வான்
அள்ளவே யண்டமது வதிரும்பாரு
ஆகாய நட்சத்திரமும் அதிரும்பாரே
விளக்கவுரை :
4369. பாரேதான் சமாதியது
சுழலும்பாரு பாங்கான சமாதிக்குள் அசரிருண்டாம்
நேரேதான் தெற்குமுகம்
அதிசயங்கள் நெருப்பான தேன்மாரி மிகவேபெய்யும்
சேரேதான் மேற்குமுகந்
தன்னிலப்பா சிறப்பான மண்மாரி மிகவேபெய்யும்
கூரேதான் சந்தனமும்
மலரும்பாரு குறிப்பான செங்கழுநீர் பூர்க்குந்தானே
விளக்கவுரை :
4370. தானான பாரிஜாதம் மலரும்பாரு
தாக்கான தேவதா புட்பந்தானும்
மானான மலைதனிலே
பூர்க்கும்பாரு மகத்தான காடெல்லாம் மணமேவீசும்
தேனான கதண்டுகளும்
கூண்டைவிட்டு தேன்பொதிக்க காட்டகத்தைச் செல்லும்பாரு
கோனான அரசர்களுந் தேனையுண்ண
குவலயத்தில் ஒருவருந்தான் பயப்படாரே
விளக்கவுரை :