4371. பயமேது உலகுதனிலொன்றுமில்லை
பாங்கான புலிபசுவும் ஒன்றாய்க்கூடி
நயமுடனே ஓர்த்துறையில்
நீர்குடிக்கும் நண்பஅன சற்பமது கீரிதானும்
செயமுடனே ஓர்கூண்டில்
விளையாடும்பார் செப்பிடவே கெருடனுடன் பாம்புதானும்
தயம்பிடவே
கூடிவிளையாடிருக்கும் தாரிணியில் அதிசயங்கள் காணும்பாரே
விளக்கவுரை :
4372. பார்க்கையிலே குருடனவன்
கண்திறப்பான் பாங்கான செவிடனுக்குக் சத்தங்கேட்கும்
தீர்க்கமுடன் ஊமையனும்
வார்த்தைசொல்வான் திறமான சப்பாணி நடப்பான்பாரு
ஏற்கவே யித்தாதி
மகிமையெல்லாம் எழிலாகத் தானடக்கும் வருங்காலத்தில்
ஆர்க்கவே போகருக்கு
சொன்னவாக்கு அப்பனே வுலகுதனில் நடக்குந்தானே
விளக்கவுரை :
[ads-post]
4373. தானாக வதிசயங்கள் மிகநடக்கும் தாக்கான சமாதிவிட்டு வருகும்போது
பானான பாறையது
வெடிக்கும்பாரு பளிங்கான ஜோதியென்ற சொரூபங்காணும்
தேனான வருஷமது முகுவதாகும்
தேவிமனோன்மணியாள் கடாட்சத்தாலே
வேனான சமாதிவிட்டு
வெளியில்யானும் விருப்பமுடன் வருவேனென்ற இயம்பினாரே
விளக்கவுரை :
4374. என்னவே கடுவெளியார்
சித்துதாமும் எழிலான கெடுவதுவுஞ் சென்றுமேதான்
பன்னவே சித்துவருங்
காலமாச்சு பாங்கான சீஷரெல்லாம் வந்திருந்தார்
முன்னமே தாமுரைத்த
வாக்கதெல்லாம் மூதுலகில் நிறைவேற நாளுமாச்சு
சொன்னதொரு காலமது
முடிவுமாச்சு சுந்தரனார் சமாதியது வெடிக்கலாச்சே
விளக்கவுரை :
4375. ஆச்சப்பா சமாதியது
வெடிக்கலாச்சு ஆகாகா நாதாக்கள் ஒளிவுதானும்
பேச்சடங்கிப் போனதொரு
தேகந்தானும் பேரான மண்ணுலகில் பிறவியாச்சு
மூச்சடங்கி
வெகுகாலமிருந்தசித்து மூதுலகைக்காண்பதற்கு வந்தாரல்லோ
மாச்சலுடன் தேகமது
தங்கம்போலாம் மகத்தான ரிஷியாரைக் கண்டிட்டாரே
விளக்கவுரை :