போகர் சப்தகாண்டம் 4376 - 4380 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 4376 - 4380 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4376. கண்டாரே சீடர்களாங் கூட்டவர்க்கம் கனமான கடுவெளியார் சித்துதம்மை
அண்டாத சேனைமுடிமாண்பரெல்லாம் வன்பான சித்தொளிவைக் கண்டுமேதான்
தெண்டமுட னடிபணிந்து வஞ்சலித்து தெளிவான நாதவொளிசித்துதம்மை
பண்டுளப செங்கழுனி மாலைதன்னை பட்சமுடன் தான்போட்டு தொழுதிட்டாரே

விளக்கவுரை :


4377. இட்டாரே பதாம்புயத்தை பணிந்துமேதான் எழிலான சீஷவர்க்கக் கூட்டத்தோடு
கட்டுடனே யவர்முகத்தைத் தானும்பார்த்து களிப்புடனே யவர்பக்கல் நிற்கும்போது
சட்டமுடன் கடுவெளியார் சித்துதாமும் சாங்கமுடன் சீஷருக்கு உபதேசங்கள்
விட்டகுறை தப்பாமல் சீடருக்கு விருப்பமுடன் வுபதேசஞ்செய்திட்டாரே

விளக்கவுரை :

[ads-post]

4378. செய்தாரே சீடருக்கு வுபதேசங்கள் செம்மலுடன் கடுவெளியார்சித்துதாமும்
வையவே சமாதிவிட்டு வெளியேவந்து பாங்குடனே வாசீர்மந் தன்னிற்சென்று
வெய்யவே கதண்டுமகாரிஷியார்தம்மை சிலதுகாலம் மேன்மையுடன் இருக்கவென்று வந்திட்டேனே

விளக்கவுரை :


4379. வந்தேனே யின்னமொரு யுகமிருந்து வளமையுடன் சமாதிக்குப் போவேனென்றும்
அந்தமுடன் கதண்டுமகாரிஷியாருக்கு வன்புடனே வாக்கதுவும் மிகவுங்கூறி
முந்தினதோர் காலாங்கி சீடர்தம்மை மூதுலக்லி காண்பதற்கு யெண்ணங்கொண்டு
சிந்தனையில் தானினைத்து சித்துதாமும் திட்டமுடன் போகர்தம்மை கேட்டிட்டாரே

விளக்கவுரை :


4380. கேட்டாரே சமாதிக்கு முன்னேயப்பா கிருபையுடன் சித்தொருவர் வந்தாரங்கே
நீட்டமுடன் காலாங்கி சீடரென்று நிலையான குளிகையது பூண்டுகொண்டு
வாட்டமுடன் என்றன்முன் வாட்பேசி வளமான பவளமென்ற மாலைபூண்டு
ஓட்டமுடன் சீனபதிபோனசித்து வுத்தமனே காணவென்று கேட்டிட்டாரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar