போகர் சப்தகாண்டம் 4271 - 4275 of 7000 பாடல்கள்
4271. எட்டான மாற்றதுவும் தங்கம்
எழிலான ஸ்ரீராமர் காசியப்பா
மட்டான தங்கமது மதிப்புமெத்த
மகிதலத்தில் மகிமையது மகிழப்போமோ
திட்டமுடன் கெந்தியென்ற
தங்கச்செம்பாம் சிவராஜயோகியவன் செய்வான்பாரு
சட்டமுடன் விதியாளி
செய்வானல்லால் சாங்கமுடன் மற்றவருஞ் செய்யார்தாமே
விளக்கவுரை :
4272. செய்யாரா
மற்றொருவரானாலுந்தான் செம்மையுடன் கைபாகஞ்செய்பாகந்தான்
எய்யாது கெந்தினுட
செம்புமார்க்கம் யெடுக்கவுமே பாகமது காணப்போமோ
மையான கெந்தியது
செம்பேயானால் மகத்தான வேதையிது கோடிக்கோடும்
துய்யதொரு மதிகாணும்
பழுத்ததங்கம் துப்புறவாய் பின்னுமந்த மதியில்தாக்கே
விளக்கவுரை :
[ads-post]
4273. தாக்கவே பத்துக்கு வொன்றுதங்கம் தண்மையுடன் வுருக்கிப்பார் மாற்றேயாகும்
நோக்கமுடன் கெந்தியென்ற
செம்புதன்னை நேர்மையுடன் ஆறுமாற்றாணிமேலே
நூக்கமுடன் பத்துக்கு
ஒன்றுதாக்க துடியான மாற்றதுவும் பத்தேயாகும்
வாக்கயுவும் பொய்யாது
ரோமர்வேதை வண்மையுள்ள கலெந்தியென்ற செம்புதானே
விளக்கவுரை :
4274. தானான சேவலென்ற மாமிசத்தை
தகமையுடன் ரோமத்தைப்போக்கிநன்றாய்
தேனான குடல்போக்கி
எலும்புபோக்கி தெளிவுறவே அறுசுவையுந்தன்னோடொக்க
பானான பதமேத்தி சமைத்துமல்லோ
பாங்குபெற மாமிசத்தையுண்டபோது
மானான தேகமது காயகற்பம்
மகத்தான சாரமது ஏறலாச்சே
விளக்கவுரை :
4275. ஏறவென்றால் மண்டலந்தான்
இப்படியே கொண்டால் எழிலான தேகமது கற்றூணாகும்
சீரலென்ற சுவாசமது
கீழ்நோக்காகும் சிறப்பான தேகமது காந்திவீசும்
பீக்கலென்ற சுரோனிதம்தான்
கட்டிப்போகும் பேரான தாதுவிர்த்தி யதிகமாகும்
கூறவே முடியாது சேவல்கற்பம்
குவலயத்தில் ரோமரிஷிமார்க்கந்தானே
விளக்கவுரை :