போகர் சப்தகாண்டம் 4436 - 4440 of 7000 பாடல்கள்
4436. இட்டேனே வெகுகோடி
திரவியங்கள் எழிலான சீனபதிமாண்பருக்கு
திட்டமுடன் யான்கொடுத்தேன்
கோடாகோடி தீரமுடன் சீனத்துப் பெண்களுக்கு
சட்டமுடன் சீனத்துப்
பெண்களுக்கு சாங்கமுடன் யான்கொடுத்த நிதியினாலே
பட்டமுடன் நிதியதுவும்
வந்தவாறு பட்சமுடன் எந்தனையும் கேட்டார்பாரே
விளக்கவுரை :
4437. கேட்டதொரு பெண்களுக்கு
யானுமல்லோ கிருபையுடன் மனங்களித்து சொன்னேன்யானும்
வாட்டமுடன் குளிகைகொண்டு
லோகஞ்சுத்தி வண்மையுடன் வெகுமலைகள் கண்டாராய்ந்து
நீட்டமுடன் நிதியினுட வாசீர்மங்கள்
நீட்சியுடன் யான்சென்று தொண்டுசெய்து
நாட்டமுடன் அவர்பணிக்கு
முன்னேநின்று நலமான வாசீர்மம் பெற்றேன்தானே
விளக்கவுரை :
[ads-post]
4438. தானான வாசீர்மம்
பெற்றுமேதான் தகமையுள்ள சல்லியமாஞ் சாத்திரத்தை
கோனான எனதையர் காலாங்கிநாதர்
கொற்றவனார் தன்பாகக் கடாட்சத்தாலும்
தேனான மனோன்மணியாள்
கிருபையாலும் தேர்ந்தெடுத்தேன் சல்லியமாங் கோர்வைநூலை
பானான வையகத்தில்
நூலைக்கொண்டு பார்த்தேனே மலைமுதலும் வளங்கள்தானே
விளக்கவுரை :
4439. வளமான மலைதோறும்
யானும்சென்று வண்மையுடன் நிதிகளெல்லாம் கண்டெடுத்தேன்
தளமுடனே சொர்ணமென்ற
கிரியில்யானும் சட்டமுடன் சல்லியமாஞ் சாத்திரத்தில்
அவ்வுடனே மையதனைத்
தீட்டியேதான் வன்புடனே ராமர்வைத்த வைப்புதன்னை
களவுடனே பூதமதை
யகற்றிப்போட்டு காசினியில் திரவியங்கள் பெற்றேன்பாரே
விளக்கவுரை :
4440. பாரேதான் ராமருட வராகந்தன்னை பாங்கான முத்திரையுடன் எடுத்தேன்யானும்
நேரேதான் ராமருட வடையாளங்கள்
நெடிதான முத்திரையாந் தங்கக்காசு
சீரேதான் கிடாரவைப்பு
கண்டெடுத்து சிறப்புடனே யுங்களுக்காய் கொண்டுவந்தேன்
வேரேதான் மற்றோரால்
எடுக்கப்போமோ விருப்பமுடன் நான்கண்டேன் உண்மைதானே
விளக்கவுரை :