போகர் சப்தகாண்டம் 4421 - 4425 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 4421 - 4425 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4421. பாரேதான் சல்லியத்தின் சாத்திரந்தான் பாங்கான கணிதமென்ற படிதானப்பா
நேரேதான் பாதனங் கிழக்குதன்னில் நேர்மையுடன் வஞ்சனத்தை பார்க்கும்போது
சீரேதான் திரவியங்கள் கிடாரவைப்பு சிறப்பான மலைதனிலே கோடியுண்டு
கூரேதான் வைப்பதனை சல்லியத்தால் கொற்றவனே எடுத்தேனே கோடியாமே

விளக்கவுரை :


4422. கோடியென்ற பொன்னையெல்லாம் உந்தமக்காய் கொப்பெனவே கொடுவந்தேன் என்றுரைத்தேன்
வாடியே திரியாமல் மனம்விடாமல் மகிதலத்தில் உங்களுக்கு குறைவுநேரா
நீடியே யுகாந்தவரை செல்வந்தானும் நீட்சியுடன் குறையாமல் செய்துவைத்தேன்
ஆடியே வகஸ்தியனார் மலையிலப்பா வன்பான திரவியத்தின் மகிமைதானே

விளக்கவுரை :

[ads-post]

4423. மகிமையா மின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் மகத்தான நிதியனைத்துங் கோடியுண்டு
அகிலமெல்ந் தானெடுத்து வப்பாகேளும் வன்புடனே உங்களுக்கா யளிப்பேனென்றேன்
சகலமுடன் மாண்பர்களும் வினயங்கேட்டு சட்டமுடன் சாத்திரத்தை கேட்கலுற்றார்
விகிதமுடன் சாபமது நிவர்த்திசெய்து வெத்தியுடன் யான்கொடுப்பேன் என்றிட்டேனே

விளக்கவுரை :


4424. இட்டேனே சீனபதியுலக்தார்க்கு எழிலான திரவியத்தின் பெருமைசொன்னேன்
சட்டமுடன் சாத்திரத்தை யிதவுகேட்டு சாங்கமுடன் சாபமதை நிவர்த்திசெய்து
வட்டமுடன் யான்தருவேன் என்றுரைத்து மனமானவுறுதிமொழி மிகவுங்கூறி
திட்டமுடன் சொர்ணகிரி மேரும்சென்றேன் தீரமுடன் சீனவர்க்கங் காட்டினேனே

விளக்கவுரை :


4425. கண்டேனே சீனவர்க்கமாயிரம்பேர் கருவான மாண்பர்களுக்கெந்தனைத்தான்
கெண்டமுடன் வஞ்சலிகள் மிகவுஞ்செய்து தோற்றமுடன் யாரென்று கேட்கலுற்றார்
உண்டான சாத்திரத்தின் உண்மைசொன்னேன் உத்தமர்கள் எந்தனையும் மெச்சியேதான்
கொண்டனைத்து சொர்ணகிரி சித்தர்பக்கம் கொப்பெனவே கொண்டுபோய் விட்டார்காணே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar