போகர் சப்தகாண்டம் 4426 - 4430 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 4426 - 4430 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4426. காணவே அடியேனை சித்துதாமும் கனமுடனே எந்தன்மேல் பட்சம்வைத்து
கூணவே யாசீர்மந்தான்கொடுத்து பொங்கமுடன் எந்தனையும் யாரென்றென்ன
காணவே யடியேனும் சீனம்விட்டு நலமுடனே சொர்ணகிரிவந்தேனெனறேன்
பாணமுள்ள காலாங்கி சீடனென்றேன் கைதொழுது மெய்வணங்கி கலங்கினேனே

விளக்கவுரை :


4427. கலங்கியே நிற்கையிலே ரிஷியார்தாமும் கருணையுடன் எந்தனுக்கு வாசீர்மங்கள்
துலங்கவேதான்கொடுத்தார் எந்தனுக்கு துப்புரவா யடியேனும் மீதிருந்து
விலங்கவே சல்லியமாஞ் சாத்திரத்தை விருப்பமுடன் யானுரைத்தேன் ரிஷியாருக்கு
நலமுடனே சல்லியங்கள் கூறும்போது நாதாந்த சித்தொளிவும் மதித்தார்பாரே

விளக்கவுரை :

[ads-post]

4428. மதிப்புடனே ரிஷியாரும் சொல்லும்போது மார்க்கமுடன் உரைத்தேனங்கே
பதியான பதிவிட்டு திரவியங்கள் பட்சமுடன் இவ்விடத்தில் வந்தேன்யானும்
நிதியான திரவியங்கள் கோடாகோடி நீட்சியுடன் எடுப்பதற்குகையுமில்லை
விதியான முறைப்படியே சாத்திரத்தை விருப்பமுடன் போதித்து எடுப்பேன்தானே

விளக்கவுரை :


4429. எடுப்பேனென் றுரைக்கையிலே ரிஷியார்தாமும் எந்தனுக்கு விடைதந்தாருண்மையாக
ஒடுக்கமுடன் யானுமல்லோ சல்லியத்தை வுத்தரித்தேன் சொர்ணகிரி மலையிலப்பா
அடுத்துமே அஞ்சனத்தை போடும்போது அதலபாதாளபூதமெல்லாம்
தடுத்துமே பூதமெல்லாங் கிடாரந்தன்னை தட்டழிந்து கெடுப்பதற்கு எண்ணமாச்சே

விளக்கவுரை :


4430. எண்ணங்கள் மிகக்கொண்டு பூதமெல்லாம் எழிலான வனுமாரையடித்துத்தள்ளும்
குண்ணருகே கிடாரத்தைச் சுத்தியல்லோ கூறவேமுடியாது பூதங்காவல்
அண்ணமுடன் சல்லியங்கள் பார்க்கும்போது அஞ்சனாதேவிதன் பூசையாலே
திண்ணமுடன் எடுப்பதற்கு தயிரியங்கள் திறமான சல்லியத்தில் செப்பலாச்சே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar