4431. செப்பவே சல்லியங்கள்
கூறும்போது செம்மையுடன் பின்னும்யான் வுச்சரித்தேன்
வப்பாலே பூதமெல்லாம்
நடுநடுங்கி அம்மலையைவிட்டுமல்லோ யேகலாச்சு
ஒப்பவே எந்தனுக்கு
நிதிகளெல்லாம் ஓகோகோ பூதங்கள் கொடுக்கலாச்சு
தப்பிதங்கள் நேராமல்
நிதியனைத்தும் நிரங்கமுடன் ரிஷியாருக் கொப்பித்தேனே
விளக்கவுரை :
4432. ஒப்பித்தேன் வரைகோடி
தங்கக்காசு ஓகோகோ ராமருட வைப்புவல்லோ
இப்புவியில் ராமருட
வராகனப்பா யெவர்காண்பர் விதியாளி கண்டேனல்லோ
செப்பிடவே
சிவராசரிஷியார்தாமும் திறளான நிதியனைத்தும் கண்ணாற்கண்டு
ஒப்புறவே எந்தனுக்கு
பாதிதந்தார் வுத்தமனார் ரிஷியாரும் உண்மைபாரே
விளக்கவுரை :
[ads-post]
4433. பாரேதான் புலிப்பாணி மைந்தாகேளு பட்சமுடன் எந்தனுக்கு ரிஷியார்தாமும்
நேரேதா னிடைபாதி
யெனக்குத்தந்தார் நேர்மையுடன் திரவியங்கள் அனைத்துமல்லோ
தேரேதான் செம்பொன்னின்
வராகந்தன்னை தேற்றமுடன் எந்தனுக்குத் தகமைகூர்ந்து
ஊரேதான் கொண்டுபோக
எனக்குச்சித்து வுத்தமனார் வுத்தாரந்தந்திட்டாரே
விளக்கவுரை :
4434. தந்தவுடன் அடியேனும்
நிதிகளெல்லாம் தன்மையுடன் சீனபதிக்கொண்டுசென்றேன்
சொந்தமுடன் சீனபதி
மாந்தருக்கு சொர்ணமென்ற நிதியனைத்தும் கொடுத்தேன்யானும்
வந்ததொரு மாண்பரெல்லாம்
நிதியைக்கண்டு வளமுடனே எந்தனையும் விசாரித்தார்கள்
இந்ததொரு திரவியத்தின்
பெருமைதன்னை எவராலுஞ்சொல்ல நாவில்லைதானே
விளக்கவுரை :
4435. தானான திரவியத்தின் பெருமைதன்னை
தாரிணியில் வெகுமாண்பர்கண்டதில்லை
தேனான மனோன்மணியாள்
கடாட்சத்தாலே தேடிவைத்த நிதிகளெல்லாம் கண்டாராய்ந்தேன்
மானான வுலகுதனில்
சல்லஇயத்தின் ரெங்கான சாத்திரத்தை கண்டாராய்ந்தேன்
மானான
சீனபதிமார்க்கத்தோர்க்கு மகத்தான திரவியங்கள் கொடுத்திட்டேனே
விளக்கவுரை :