4416. உண்டான பொத்கைமலை தன்னிலப்பா
வுத்தமனே சல்லியசாத்திரத்தின்மார்க்கம்
கண்டுமே யடியேனும்
மிகவாராய்ந்து கருத்துடனே தானெடுத்தேன் கோடியுண்டாம்
வண்டமிழ்சொல் வங்கத்தார்
கூட்டங்கூடி வளமான நிதிகளெல்லா மெனக்குப்பாதி
கொண்டுபோ மென்றுசொல்லி
விடைதந்தார்கள் கொற்றவர்கள் சங்கத்தார் புலவர்தாமே
விளக்கவுரை :
4417. தாமான நிதிகளெல்லாம் அடியேன்தானும் தன்மையுடன் ஜெயமுனியார் பக்கலாக
பூமானாம் ரிஷியின்
மகாதேவர்பக்கம் பொங்கமுடன் கொண்டல்லோ யொப்பிவைத்தேன்
சாமானமானதொரு திரவியத்தை
சட்டமுடன் எந்தனுக்காய் கொடுத்துவிட்டார்
ஆமானமாகவே யடியேன்தானும்
வன்புடனே சீனபதிக் கொடுசென்றேனே
விளக்கவுரை :
[ads-post]
4418. சென்றேனே திரவியங்கள்
அனைத்துமல்லோ சிறப்புடனே யானுமல்லோ சீனத்தார்க்கு
குன்றான திரவியங்கள்
செம்பொன்னெல்லாம் கொட்டினேன் மலைபோல தங்கமப்பா
என்றன்மேல் பட்சம்வைத்து
நிதிகள்தம்மை எழிலாகத்தான் கேட்டார்சீனத்தார்கள்
வென்றிடவே ஜெயமுனியாரைக்கண்டேன்
வேதாந்த ரிஷியாரும் அருள்செய்தாரே
விளக்கவுரை :
4419. அருளான மகிமையது மெத்தவுண்டு
வன்பான சீனபதிமார்க்கத்தோரே
பொருளான திரவியங்கள்
எடுப்பதற்கு பொங்கமுடன் வித்தைமிகக் கற்றுவந்தேன்
தெருளான தேசமெல்லாம்
திரிந்துமேதான் தேற்றமுடன் தென்பொதிகை கொண்டுசென்றார்
இருளான காட்டையதை யான்கடந்து
யெழிலான தென்பொதிகை கண்டிட்டேனே
விளக்கவுரை :
4420. கண்டேனே பொதிகைமலை
கடலோரந்தான் கானாறுவோடைமுதல் தான்கடந்து
அண்டமுனி ராட்சதர்கள்
காணாநாடு அழகான தென்பொதிகை சாரலப்பா
தண்டலங்கள் தாமறியார்
கடலோரந்தான் தகமையுள்ள சாரலது கொண்டுசென்றார்
விண்டலமும் அறியாத
குண்ணுவப்பா வீராறு சுனையருகில் சென்றேன்பாரே
விளக்கவுரை :