4411. சொல்லவே யடியேனும் மனதுவந்து
துப்புரவாய் ஞானந்தனைமறந்து
வெல்லவே மெய்ஞானமுட்புகுந்து
மேதினியில் யானுமொரு சித்தனாகி
சச்லியங்கள் சாத்திரங்கள்
மிகவும்கற்று தாரிணியில் கருவாளி யானுமாகி
தெள்ளியமாய் வித்தைதனில்
முதல்வனாகி தேசத்தில் வஞ்சனமாஞ் சித்தானேனே
விளக்கவுரை :
4412. சித்தானேன் சிலகாலஞ்
சென்றுயானும் ஜெயமுனியார் பாதாரவிந்தத்தாலே
சத்தான லோகமதில்
இருக்குந்தானம் தகமையுள்ள நிதிகளெல்லாந் தானெடுக்க
எத்தனங்கள் மிகச்செய்து
புனிதவானாய் எழிலான சாத்திரத்தை கையிலேந்தி
முத்தான யுலகமெலாம்
மிகமதிக்க வுத்தமனே திரிந்தேனே போகர்தானே
விளக்கவுரை :
[ads-post]
4413. போகரென்று சொல்லவென்றால்
லோகந்தன்னில் பொங்கமுடன் கண்டவர்கள் தானடுங்க
யோகமுடன் திக்கெல்லாம்
திரண்டுமல்லோ எந்தனையுங் காணுதற்கு வெகுஜனங்கள்
சாங்கமுடன் கண்டல்லோ
யடியேனுக்கு சட்டமுடன் சோடசோபசாரஞ்செய்து
வேகமுடன் நிதியெடுக்க
எந்தனைத்தான் மேதினியில் அழைத்தவர்கள் கோடியாமே
விளக்கவுரை :
4414. கோடியாம் நிதியெடுக்க
என்னைத்தானும் கொற்றவர்கள் கூட்டியல்லோ தேசந்தன்னில்
நீடியே திரவியங்கள்
கண்டெடுக்க நிட்களமாய் வுறுதிமிகப்பாடுசெய்து
நாடியே சாத்திரத்தி
னுளவுபார்த்து நாதாந்த சித்தொளிவை மனதிலுண்ணி
வாடியே திரியாமல்
அடியேன்தானும் வண்மையுடன் கொடுக்கலுற்றேன் நிதிகள்தானே
விளக்கவுரை :
4415. கானான நிதிகளது எடுக்கலென்ன
தட்சணமும் மலையமுனிவாசீர்மத்தில்
கேனான குருக்கள்முதல்
சித்துயாவும் கூட்டியே யெனையழைத்து கொண்டுசென்றார்
மானான மனோன்மணியாள்
கிருபையாலே மகத்தான நிதியெடுக்க சென்றேனங்கே
தேனான தென்மலையாங்
கடலோரத்தில் தேற்றமுடன் யான்சென்றேன் பதிதானுண்டே
விளக்கவுரை :