4406. எய்யுமே சாபம்வருமென்றுமல்லோ
எழிலான சீஷவர்க்கம் கூறும்போது
பையவே எந்தனுக்கு பயமுமாகி
பாரமுடன் கைசோர்ந்து மெய்யுஞ்சோர்ந்து
நையவே யடியேனுஞ் சீடர்தம்மை
நடுக்கமுடன் யானுமல்லோ வஞ்சலித்து
துய்யவே காலாங்கி
சீடனென்றேன் துரைராசர் எந்தனையும் மன்னித்தாரே
விளக்கவுரை :
4407. மன்னித்து எந்தனுக்கு
சாபந்தன்னை மதிப்புடனே ஜெயமுனியார் பக்கல்சென்று
கன்னியமாய் ஜெயமுனியார்
தன்னைநோக்கி கர்த்தாவாம் சித்துமுனி யடிபணிந்து
இன்னிலத்தில் சீனபதி
மனிதன்தானும் எழிலான குளிகையது பூண்டுகொண்டு
துன்னீலங் கண்ணானாம்
போகநாதன் துப்புறவாய்க் காணவல்லோ வந்திட்டாரே
விளக்கவுரை :
[ads-post]
4408. வந்தாரே போகரிஷியென்றுதாமும்
வளமாகத்தாமுரைத்தார் சீஷவர்க்கம்
அந்தமுடன் ஜெயமுனிக்குக்
கூறும்போது வன்புள்ள ஜெயமுனியார் ரிஷியார்தாமும்
சொந்தமுடன் ரிஷியாரும்
அன்புகூர்ந்து சுத்தமுடன் எந்தனையும் வரவழைத்து
சிந்தனையாய்
காலாங்கிசீடாகேளு சிற்பரனே வந்ததினால் குற்றமாச்சே
விளக்கவுரை :
4409. ஆச்சப்பா போகமுனி சொல்லக்கேளும் அன்பான யென்வார்த்தை யுந்தனுக்கு
பாச்சலுடன்
சீனபதிவிட்டுமல்லோ பாருலகில் வந்ததொரு வதிசயங்கள்
மாச்சலுடன் யென்னவதிசயங்கள்காண
மன்னவனே யேன்வந்தாயென்றுகேட்க
நீச்சமுடன் அடியேனும்
மிகநடுங்கி நிஷ்களமாய்த் தானுரைத்தேன் உண்மைதானே
விளக்கவுரை :
4410. உண்மையாய் யடியேனும்
உரைத்தபோது உத்தமனார் ஜெயமுனியார் எந்தனுக்கு
நன்மைபெற உபதேசம்
மிகவுஞ்செய்து தீரமுடன் சகலகலைக் கியானமெல்லாம்
வண்மையுடன் எந்தனுக்கு
உபதேசித்து வகைமான் தொகைமானம் சொல்லிட்டாரே
விளக்கவுரை :