போகர் சப்தகாண்டம் 4401 - 4405 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 4401 - 4405 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4401. பாரேதான் குளிகைகொண்டு செல்லும்போது பாங்கான வழிதடமும் அனேகங்கண்டேன்
நேரேதான் டில்லிக்குத் தென்கிழக்கே நேர்மையுடன் குளிகைகொண்டு இறங்கினேன்யான்
சீரேதான் அவ்விடத்தி லுள்ளமாண்பர் சிறப்புடனே எனைவந்து கண்டாரங்கே
ஊரேதான் குருப்படைகள் யாவுங்கண்டு வுத்தமர்கள் எந்தனுக்கு துதிசொன்னாரே

விளக்கவுரை :


4402. துதித்துமே எந்தனிட பக்கல்வந்து துறையோட முறையோடும் அஞ்சலித்து
மதிப்புடனே எந்தனையும் யாரென்றார்கள் மகத்தான மாண்பரெல்லாங் கூட்டங்கூடி
பதியான மாநகரம் வதிசயங்கள் பாரினிலே இதுவரையில் கண்டதில்லை  
ததிதாகத் தோற்றுகுது யென்றுமல்லோ புத்தியுடன் மாண்பரெல்லாம் மயங்கினாரே

விளக்கவுரை :

[ads-post]

4403. மயங்கியே மாண்பரெல்லாங் கூட்டங்கூடி மகத்தான ஜெயமுனிவர் சீடர்பக்கல்
தயங்கியே சீடர்களைத்தானும் பார்த்துத் தாரிணியில் புதுமையிது யாங்கள்கண்டோம்
நயம்புடனே சீனபதிதேசம்விட்டு நலமான காலாங்கி சீடன்தானும்
செயமுடனே குளிகைகொண்டு யிங்குவந்தார் சீரான மகத்துவங்கள் சொல்லொண்ணாதே

விளக்கவுரை :


4404. ஒண்ணாது சீடவர்க்கமானபேர்கள் ஓகோகோ நாதாக்கள் யாரோவென்று
நண்ணியே தன்மனதில் தானடக்கி யேகாந்த சித்தொளிவைக்காணவென்று
எண்ணியே சீஷவர்க்கமாயிரம்பேர் நலமுடனே எந்தனையுங் காணவென்று
வண்ணமுடன் எந்தனை யாரென்றுகேட்க வண்மையுடன் காலாங்கி சீடனென்றேன்

விளக்கவுரை :


4405. யென்றேனே யடியேனும் சொல்லும்போது எழிலான சீஷவர்க்மெந்தனுக்கு
வென்றிடவே காலாங்கி சீடர்களும் வீராகக் கானகத்தில் வரலாமோசொல்
குன்றான மலையுண்டு குகைதானுண்டு குவலயத்தில் மாமுனிவர் கண்டதில்லை
இன்றுநீ வந்ததினால் உந்தனுக்கு எழிலான சாபமது வெய்தும்பாரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar