போகர் சப்தகாண்டம் 4456 - 4460 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4456. ஏகவே செயமுனியார் சித்துதாமும் யெழிலான சமாதிக்குப்போகவென்று
சாகமுடன் திருபாலின் கடலோரந்தான் சட்டமுடன் சமாதிக்கு ஏகவென்று
நாகமுடன் சீஷவர்க்கக் கூட்டத்தோடு நலமுடனே சமாதிக்கு முன்னதாக
பாகமுடன் ஜெயமுனியார் சித்துதாமும் பட்சமுடன் சீஷரொடு சென்றிட்டாரே

விளக்கவுரை :


4457. சென்றாரே ஜெயமுனியார் சித்துதாமும் செழிப்பான சமாதியது தோண்டவென்று
நின்றதொரு சமாதியது தோண்டியல்லோ நிட்களமாய் கல்லாலே அறையுண்டாக்கி
வென்றிடவே கற்பாறைதானமைத்து விருப்பமுடன் சீஷவர்க்க மாண்பரோடு
கன்றாமல் ஜெயமுனியார் சித்துதாமும் காசினியை யான்மறந்து யேகினாரே 

விளக்கவுரை :

[ads-post]

4458. ஏகவே சமாதிக்கு செல்கவென்று எழிலான ஜெயமுனியார் சித்துதாமும்
பாகமுடன் சமாதிதனில் இறங்கியல்லோ பட்சமுடன் சீடருக்குக் கூறலுற்றார்
வேகமுடன் கற்பாறை மூடிப்போட விருப்பமுடன் சீஷவர்க்கமுரைத்தபோது
தோகமுடன் சீஷவர்க்கமெல்லாம்கூடி தோறாமல் பாறைதனை மூடிப்பாரே

விளக்கவுரை :


4459. மூடவே ஜெயமுனியார் சித்துதாமும் முனையான சமாதிதனிலிருந்துகொண்டு
நீடவே யசரீரிவாக்குதானும் நிட்களமாய் தானுரைத்தார் சீடருக்கு
கூடவே முப்பது வாண்டுமட்டும் குறையாமல் பூமிதனிலிருந்துகொண்டு
ஆடவே வையகத்தை யான்மறந்து அவனிதனில் வருவேனென்றுரைத்திட்டாரே

விளக்கவுரை :


4460. உரைத்துமே சிலகாலம் சென்றபின்பு ஓகோகோ நாதாக்கள் சித்துதம்மால்
திரைப்புடனே மறுபடியும் வருவேனென்று திட்டமுடன் ஜெயமுனியார் சொன்னவாக்கு
நிரைப்புடனே முப்பதுவாண்டுசென்று நேர்மையுடன் சீஷவர்க்கம் வந்துநிற்க
மரைப்பில்லா சித்துமுனிநாதர்தாமும் மார்க்கமுடன் சமாதிவிட்டு வந்திட்டாரே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 4451 - 4455 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4451. காணவே இருபதுவாண்டுமட்டும் காசினியையான்மறந்து சமாதிநின்று
பூணவே நான்வருகுங்காலந்தன்னில் புகழாக சீஷவர்க்கமெல்லாருந்தான்
வேணவே சமாதிவிட்டு வருகும்போது விருப்பமுடன் என்பக்கல்நின்றுமல்லோ
மாணவே சமாதியது வெடிக்கும்போது மண்டலத்தில் பாறையது வெடிக்கும்பாரே

விளக்கவுரை :


4452. பாரேதான் சித்துவருங் காலந்தன்னில் பாருலகில் சீஷவர்க்க மெல்லாருந்தான்
நேரேதான் சமாதியது வெடிக்குமுன்னே நேர்மையாந்திருக்கூட்டமாண்பரோடும்
சீரேதான் சமாதியது முன்னேநின்று சிறப்பான சித்துவருங்காலமென்று
தீரேதான் வெகுகோடி மாண்பராலே தீர்க்கமுடன் சமாதியிட மிருந்தார்தாமே

விளக்கவுரை :

[ads-post]

4453. இருந்தாரே கோடிவர்க்க சேனையோடு எழிலான சமாதியது முன்னேநிற்க
பொருந்தவே சமாதியது வெடித்துமல்லோ பொங்கமுடன் நாதாந்த சித்துதாமும்
திருந்தவே காயாதிகற்பங்கொண்ட தேகமது ஜெகஜோதி மின்னல்போல
வருந்தவே சித்துமகாரிஷியார்தாமும் வையகத்தில் வந்ததொருவண்மைபாரே

விளக்கவுரை :


4454. வண்மையாஞ் செயமுனியார் சித்துதாமும் வையகத்தை தான்மறந்துவந்துமல்லோ
வுண்மையாய் தேகமது இருந்துமென்ன ஓகோகோ நாதாக்கள் கோடிபேர்கள்
திண்மையுடன் வையகத்தை மறந்துமல்லோ திகழான சமாதிக்கு சென்றார்தாமும்
பன்மையாய் நான்சிலதுகாலந்தன்னில் பட்சமுடன் சமாதிக்குப்போகநன்றே  

விளக்கவுரை :


4455. நன்மையுடன் சமாதிக்குப் பின்னுமோர் நாதாந்த சொரூபரங்கே மனதுவந்து
வன்மைசெறி பாக்கியமும்  நாடுதானும் வளமான நன்னகம்தான்மறந்து
துன்மையெனும் வையகத்தில் வாழ்க்கையற்று துப்புரவாய் சமாதிக்குப்போரேனென்று
தன்மையாம் சித்துமுனி சொரூபானந்தர் சட்டமுடன் சமாதிக்கு ஏகினாரே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 4446 - 4450 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4446. இட்டாரே ஜெயமுனியார் சித்துதாமும் எழிலான வடகோடி கானகத்தில்
திட்டமுடன் தென்பொதிகை சாரல்தன்னில் திகழுடனே சமாதிக்கு இடமுந்தேட
வட்டமுடன் சீஷவர்கம் மனதுவந்து மகத்தான சமாதியது இடமுந்தேடி
அட்டமுடன் குழியதுவும் தோண்டியேதான் அழகான சமாதியது கட்டிட்டாரே

விளக்கவுரை :


4447. கட்டவே சமாதியது என்னசொல்வேன் கைலாசஜெயமுனியார் சித்துதாமும்
திட்டமுடன் சமாதிக்கு செல்வேனென்று சிறப்புடனே சீஷவர்க்கந்தனையழைத்து
மட்டவிழ்கொள் மாண்பர்களே சீமானேகேள் மகத்தான சமாதிக்கு செல்லப்போறேன்
இட்டமுடன் கிட்டிருந்து நீங்களெல்லாம் யெளிவான சமாதிதனை மூடிப்போடே

விளக்கவுரை :

[ads-post]

4448. போடென்று சொல்லுகையில் சித்தர்தாமும் பொங்கமுடன் சீஷவர்க்கம் கிட்டிழிந்து
கூடேதான் உபவாசந்தானிருந்து கொற்றவனார் ஜெயமுனியார் சித்துதாமும்
வீடேதான் கற்பாறைமேலேமூடி விருப்பமுடன் மண்ணதனை மேலேதூவி
சாடவே சமாதியது பொதித்துமேதான் சட்டமுடன் செய்யவென்று மொழிசொன்னாரே

விளக்கவுரை :


4449. சொன்னாரே ஜெயமுனியார் சித்துதாமும் தோற்றமுடன் வசரீரிகூறலாச்சு
மன்னாகேள் நான்வருகுங்காலந்தன்னில் மகத்தான வதிசயங்கள் மிகநடக்கும்
இன்னிலத்தில் குருடரெல்லாங்கண்திறப்பார் எழிலான வூமைகளும் பேசுவான்பார்
பன்னவே சப்பாணி நடப்பான்பாரு பாருலகில் செவிடனொளி கேட்குந்தானே

விளக்கவுரை :


4450. தானான தேன்மாரி பொழியும்பாரு தண்மையுள்ள பிரளயங்கள் அதிகங்காணும்
கோமானாம் வேந்தர்களும் போரேசெய்வார் குவலயத்தில் மாண்பரெல்லாம் போரில்மாள்வார்
தேனான மனோன்மணியாள் தேசம்மாறி திசைகெட்டு பதிகெட்டு திரும்பிநிற்பார்
பானான வுலகமெல்லா மென்னைப்போற்றி பட்சமுடன் துதிசெய்வார் காண்பீர்தானே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 4441 - 4445 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4441. தானான ராமருட வராகந்தன்னை தகமையுள்ள சீனபதிதேசத்தார்கள்  
மானான செம்பொன்னின் காசுதன்னை மகத்தான முத்திரையுந் தளமுங்கண்டு
தேனான தென்பொதிகை சாரல்தன்னில் சிறப்புடனே தானெடுத்த தங்கக்காசு
கோனான எனதையர் காலாங்கிநாதர் குறிப்புடனே சொன்னதொரு காசுமாமே

விளக்கவுரை :


4442. காசான செம்பொன்னின் தங்கக்காசு கருவாகக் கண்டல்லோ சீனத்தார்கள்
நேசமுடன் ராமருட வராகன்போலும் நேர்மையுடன் ராஜாதிராஜன்போலும்
பாசமுடன் பரங்கியென்ற தங்கக்காசு பலபலவாம் தேசமதில் செய்யலாச்சு
மாசில்லா தங்கமது தசமாற்றாக மன்னவராஞ் சீனபதி யமைந்திட்டாரே

விளக்கவுரை :

[ads-post]

4443. அமைத்தாரே பலபலவாம் வர்ணமாகும் வப்பனே சீனபதி மார்க்கத்தோர்கள்
சமைத்தாரே மதியாலே காசுதன்னை சட்டமுடன் தானமைத்தார் வினோதங்கோடி
இமையாமல் ரூபமதைத் தானழைத்து எழிலான ராஜாதிமாண்பருக்கு
சுவைபோலும் தங்கமென்ற காசுதன்னை சூட்டினார் நாவில்லை சொல்லொண்ணாதே

விளக்கவுரை :


4444. ஒண்ணாது யின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் ஓகோகோ நாதாக்கள் மகத்துவந்தான்
எண்ணாது புலிப்பாணி மைந்தாகேளு எழிலான காலாங்கி சொன்னநீதி
திண்ணமுடன் தேசமெலாஞ் சுத்தியல்லோ தேற்றமுடன் ஜெயமுனியைக் கண்டேன்யானும்
வண்ணமுடன் வெகுகாலமிருந்தசித்து மார்கமுடன் சமாதிதனைக் காண்பேன்பாரே

விளக்கவுரை :


4445. காணவே போகருஞ் சொல்லும்போது கருவான ஜெயமுனியார் சீஷவர்க்கம்
பூணவே ஜெயமுனியார் சித்துதாமும் புகழான சீஷவர்க்கந்தனையழைத்து
தோணவே எந்தனுக்கு சமாதிதானும் துப்புரவாய் யானடையமனமுங்கொண்டேன்
நீணவே காசினியில் ஆசையற்றேன் நிட்களமாய் சமாதிசெல்வேன் என்றிட்டாரே

விளக்கவுரை :


Powered by Blogger.