போகர் சப்தகாண்டம் 4441 - 4445 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 4441 - 4445 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4441. தானான ராமருட வராகந்தன்னை தகமையுள்ள சீனபதிதேசத்தார்கள்  
மானான செம்பொன்னின் காசுதன்னை மகத்தான முத்திரையுந் தளமுங்கண்டு
தேனான தென்பொதிகை சாரல்தன்னில் சிறப்புடனே தானெடுத்த தங்கக்காசு
கோனான எனதையர் காலாங்கிநாதர் குறிப்புடனே சொன்னதொரு காசுமாமே

விளக்கவுரை :


4442. காசான செம்பொன்னின் தங்கக்காசு கருவாகக் கண்டல்லோ சீனத்தார்கள்
நேசமுடன் ராமருட வராகன்போலும் நேர்மையுடன் ராஜாதிராஜன்போலும்
பாசமுடன் பரங்கியென்ற தங்கக்காசு பலபலவாம் தேசமதில் செய்யலாச்சு
மாசில்லா தங்கமது தசமாற்றாக மன்னவராஞ் சீனபதி யமைந்திட்டாரே

விளக்கவுரை :

[ads-post]

4443. அமைத்தாரே பலபலவாம் வர்ணமாகும் வப்பனே சீனபதி மார்க்கத்தோர்கள்
சமைத்தாரே மதியாலே காசுதன்னை சட்டமுடன் தானமைத்தார் வினோதங்கோடி
இமையாமல் ரூபமதைத் தானழைத்து எழிலான ராஜாதிமாண்பருக்கு
சுவைபோலும் தங்கமென்ற காசுதன்னை சூட்டினார் நாவில்லை சொல்லொண்ணாதே

விளக்கவுரை :


4444. ஒண்ணாது யின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் ஓகோகோ நாதாக்கள் மகத்துவந்தான்
எண்ணாது புலிப்பாணி மைந்தாகேளு எழிலான காலாங்கி சொன்னநீதி
திண்ணமுடன் தேசமெலாஞ் சுத்தியல்லோ தேற்றமுடன் ஜெயமுனியைக் கண்டேன்யானும்
வண்ணமுடன் வெகுகாலமிருந்தசித்து மார்கமுடன் சமாதிதனைக் காண்பேன்பாரே

விளக்கவுரை :


4445. காணவே போகருஞ் சொல்லும்போது கருவான ஜெயமுனியார் சீஷவர்க்கம்
பூணவே ஜெயமுனியார் சித்துதாமும் புகழான சீஷவர்க்கந்தனையழைத்து
தோணவே எந்தனுக்கு சமாதிதானும் துப்புரவாய் யானடையமனமுங்கொண்டேன்
நீணவே காசினியில் ஆசையற்றேன் நிட்களமாய் சமாதிசெல்வேன் என்றிட்டாரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar