4446. இட்டாரே ஜெயமுனியார்
சித்துதாமும் எழிலான வடகோடி கானகத்தில்
திட்டமுடன் தென்பொதிகை
சாரல்தன்னில் திகழுடனே சமாதிக்கு இடமுந்தேட
வட்டமுடன் சீஷவர்கம்
மனதுவந்து மகத்தான சமாதியது இடமுந்தேடி
அட்டமுடன் குழியதுவும்
தோண்டியேதான் அழகான சமாதியது கட்டிட்டாரே
விளக்கவுரை :
4447. கட்டவே சமாதியது
என்னசொல்வேன் கைலாசஜெயமுனியார் சித்துதாமும்
திட்டமுடன் சமாதிக்கு
செல்வேனென்று சிறப்புடனே சீஷவர்க்கந்தனையழைத்து
மட்டவிழ்கொள் மாண்பர்களே
சீமானேகேள் மகத்தான சமாதிக்கு செல்லப்போறேன்
இட்டமுடன் கிட்டிருந்து
நீங்களெல்லாம் யெளிவான சமாதிதனை மூடிப்போடே
விளக்கவுரை :
[ads-post]
4448. போடென்று சொல்லுகையில் சித்தர்தாமும் பொங்கமுடன் சீஷவர்க்கம் கிட்டிழிந்து
கூடேதான் உபவாசந்தானிருந்து
கொற்றவனார் ஜெயமுனியார் சித்துதாமும்
வீடேதான் கற்பாறைமேலேமூடி
விருப்பமுடன் மண்ணதனை மேலேதூவி
சாடவே சமாதியது
பொதித்துமேதான் சட்டமுடன் செய்யவென்று மொழிசொன்னாரே
விளக்கவுரை :
4449. சொன்னாரே ஜெயமுனியார்
சித்துதாமும் தோற்றமுடன் வசரீரிகூறலாச்சு
மன்னாகேள்
நான்வருகுங்காலந்தன்னில் மகத்தான வதிசயங்கள் மிகநடக்கும்
இன்னிலத்தில்
குருடரெல்லாங்கண்திறப்பார் எழிலான வூமைகளும் பேசுவான்பார்
பன்னவே சப்பாணி நடப்பான்பாரு
பாருலகில் செவிடனொளி கேட்குந்தானே
விளக்கவுரை :
4450. தானான தேன்மாரி பொழியும்பாரு
தண்மையுள்ள பிரளயங்கள் அதிகங்காணும்
கோமானாம் வேந்தர்களும்
போரேசெய்வார் குவலயத்தில் மாண்பரெல்லாம் போரில்மாள்வார்
தேனான மனோன்மணியாள்
தேசம்மாறி திசைகெட்டு பதிகெட்டு திரும்பிநிற்பார்
பானான வுலகமெல்லா
மென்னைப்போற்றி பட்சமுடன் துதிசெய்வார் காண்பீர்தானே
விளக்கவுரை :