4451. காணவே இருபதுவாண்டுமட்டும்
காசினியையான்மறந்து சமாதிநின்று
பூணவே
நான்வருகுங்காலந்தன்னில் புகழாக சீஷவர்க்கமெல்லாருந்தான்
வேணவே சமாதிவிட்டு
வருகும்போது விருப்பமுடன் என்பக்கல்நின்றுமல்லோ
மாணவே சமாதியது
வெடிக்கும்போது மண்டலத்தில் பாறையது வெடிக்கும்பாரே
விளக்கவுரை :
4452. பாரேதான் சித்துவருங்
காலந்தன்னில் பாருலகில் சீஷவர்க்க மெல்லாருந்தான்
நேரேதான் சமாதியது
வெடிக்குமுன்னே நேர்மையாந்திருக்கூட்டமாண்பரோடும்
சீரேதான் சமாதியது
முன்னேநின்று சிறப்பான சித்துவருங்காலமென்று
தீரேதான் வெகுகோடி மாண்பராலே
தீர்க்கமுடன் சமாதியிட மிருந்தார்தாமே
விளக்கவுரை :
[ads-post]
4453. இருந்தாரே கோடிவர்க்க
சேனையோடு எழிலான சமாதியது முன்னேநிற்க
பொருந்தவே சமாதியது
வெடித்துமல்லோ பொங்கமுடன் நாதாந்த சித்துதாமும்
திருந்தவே காயாதிகற்பங்கொண்ட
தேகமது ஜெகஜோதி மின்னல்போல
வருந்தவே
சித்துமகாரிஷியார்தாமும் வையகத்தில் வந்ததொருவண்மைபாரே
விளக்கவுரை :
4454. வண்மையாஞ் செயமுனியார்
சித்துதாமும் வையகத்தை தான்மறந்துவந்துமல்லோ
வுண்மையாய் தேகமது
இருந்துமென்ன ஓகோகோ நாதாக்கள் கோடிபேர்கள்
திண்மையுடன் வையகத்தை
மறந்துமல்லோ திகழான சமாதிக்கு சென்றார்தாமும்
பன்மையாய்
நான்சிலதுகாலந்தன்னில் பட்சமுடன் சமாதிக்குப்போகநன்றே
விளக்கவுரை :
4455. நன்மையுடன் சமாதிக்குப்
பின்னுமோர் நாதாந்த சொரூபரங்கே மனதுவந்து
வன்மைசெறி பாக்கியமும் நாடுதானும் வளமான நன்னகம்தான்மறந்து
துன்மையெனும் வையகத்தில்
வாழ்க்கையற்று துப்புரவாய் சமாதிக்குப்போரேனென்று
தன்மையாம் சித்துமுனி
சொரூபானந்தர் சட்டமுடன் சமாதிக்கு ஏகினாரே
விளக்கவுரை :