போகர் சப்தகாண்டம் 4471 - 4475 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4471. தானான புலிப்பாணி மைந்தாகேளு தண்மையுள்ள சீனபதிவிட்டுயானும்
கோனான எனதையர்காலாங்கிநாதர் குருசொன்ன வாக்கினது பிரகாரந்தான்
தேனான குளிகையது பூண்டுயானும் தேசமெலாம் சுத்தியல்லோ வருகும்போது
மானான வடகோடிகானகத்தில் மார்க்கமுடன் மலையொன்று கண்டேன்பாரே

விளக்கவுரை :


4472. பாரேதான் வடகோடி கானகத்தில் பாங்கான திருப்பாலின் கடலின்பக்கல் 
சீரேதான் மலையொன்று குண்ணொன்றுண்டு சிறப்பான வசுவினியாம் பருவமப்பா
நேரேதான் மலைநாடு நடுமையத்தில் நேர்மையுடன் குளிகையது கொண்டுமல்லோ
ஊரேதான் குடிகளில்லா மலைகள்நாடு வுத்தமனே யானுமது இறங்கினேனே 

விளக்கவுரை :

[ads-post]

4473. இறங்கியே மலைவளத்தைச் சுற்றங்கண்டேன் எழிலான மலைசுத்திகானாறுண்டு
நிறம்வேறு ரிஷிமுனிவர் அங்கேயுண்டு நேர்மையுடன் பச்சைவண்ண மாண்பரப்பா
திறமுடைய சீஷவர்க்கம் சொல்லொண்ணாது தீர்க்கமுடன் வெகுபேரைக்கண்டேன்யானும்
உயமான மாணாக்கர் ஓடிவந்து வுத்தமனே எந்தனையும் கண்டிட்டாரே

விளக்கவுரை :


4474. கண்டாரே சீஷவர்க்கமோடிவந்து கடூரமுடன் எந்தனையும் யாரென்றார்கள்
விண்டதொரு சீஷவர்க்கந்தன்னைப்பார்த்து வீரடங்கி மெய்நடுங்கி யடியேன்தானும்
தொண்டனைப்போல் அடிபணிந்து முடிகள்சாய்த்து தொழுதிறங்கி மிகப்பணிந்து ஐயாவென்றேன்
அண்டர்முதல் தான்போற்றும் காலாங்கிநாதர் அவருடைய சீஷனென்று வுரைத்திட்டேனே

விளக்கவுரை :


4475. அறைந்தேனே காலாங்கி சீஷனென்றேன் அங்ஙனவே வார்த்தையது வுரைத்தபோது
குறைபேச வந்ததொரு சீஷவர்க்கம் குறிப்புடனே எந்தனையும் பார்த்தபோது
முறைபேசி கதைபேசி வுறவுபேசி மூதுலகில் சித்துமகாரிஷிநினைந்து
திறமையுடன் அஞ்சலிகள் மிகவுஞ்செய்து தீர்க்கமுடன் ஆசீர்மஞ் செய்திட்டாரே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 4466 - 4470 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4466. மறந்தாரே ஜெயமுனியார் சித்துதாமும் மகத்தான வையகத்தினாசையெல்லாம்
துறந்தாரே பதினாறு பிரமாவைத்தான் துப்புரவாய் யுகங்கடந்து சித்துதாமும்
திறமுடனே சகலகலையறிந்து மென்ன திக்கெங்கும் ஒருகுடையிலாண்டுமென்ன
அறமதுவும் வழுவாமல் செய்துமென்ன அவனிதனில் ஜெயமுனியும் மண்ணானாரே

விளக்கவுரை :


4467. மண்ணாகிப்போனாரே சித்துதாமும் மகத்தான வையகத்தின் ஆசையற்று
கண்ணபிரான் முதலானோர் மண்ணில்மாண்டார் காசினியில் யாரிருந்தார் வுலகுதன்னில்
வண்ணமுடன் சித்துமுனி ரிஷியார்தாமும் வளமுடனே யிப்படியே மாண்டாரல்லோ
எண்ணமது கொண்டல்லோ வுலகுதன்னில் எழிலான வாசையது வொழிந்திட்டாரே

விளக்கவுரை :

[ads-post]

4468. ஒழித்தாரே யிப்படியே அனேகசித்து வொப்புரவே கலியுகத்தினாசையெல்லாம்
வழிப்படவே யொழித்தவர்கள் கோடாகோடி வைகுண்ட பதவிதனையடைந்தார்கோடி
பழிதனக்கு இடங்கொடா வண்ணமாக பாருலகில் சடமொழித்தார் சித்துதாமும்
அழியாத சடலமது வழிந்துபோச்சு வப்பனே யுலகமதில் வொன்றுங்காணே

விளக்கவுரை :


4469. காணவே யிப்பெரிய சித்துதம்மை காசினியில் சித்தர்முனி யென்னலாகும்
தோணவே தவங்கிடந்த ரிஷியார்தம்மை தொல்லுலகில் தெய்வமென்று செப்பலாமோ
வேணபடி வையகத்து மாண்பரெல்லாம் விருப்பமுடன் இப்படியே மாய்ந்தாரல்லோ
நாணவே சித்தர்களின் வர்க்கமெல்லாம் நானஇலத்தில் இப்படியே பொய்வாழ்வாச்சே

விளக்கவுரை :


4470. ஆச்சப்பா புலிப்பாணி மைந்தாகேளு ஆரிருந்தார் வுலகுதன்னில் பொய்யேவாழ்வு
மாச்சலுடன் சமாதிக்குப் போவேனென்று மானிலத்தில் தவமழிந்து கெட்டார்கோடி
மூச்சடங்கி வாசியோகஞ் செய்தபேரும் மூதுலகிலிருந்தாரோ லக்கோயில்லை
ஏச்சான வுலகமெலாம் இப்படியேயாச்சு எழிலான மாயசித்தி கிரியைதானே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 4461 - 4465 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4461. வந்தாரே சித்துமுனி ரிஷியார்தாமும் மார்க்கமுடன் வையகத்தைக்காணவென்று
சொந்தமுடன் சமாதிவிட்டு வந்துமல்லோ தோற்றமுடன் சீஷவர்க்கம் காண்பதாச்சு
அந்தமுடன் சீடாதிசீடரெல்லாம் வன்புடனே குருதனையே வாழ்த்திநின்று  
சிந்தனைகள் மிகத்தீர்ந்து குருவின்பாதம் சிறப்புடனே மாண்பரெல்லாம் பணிந்திட்டாரே

விளக்கவுரை :


4462. பணியவே சித்துமுனி ரிஷியார்தாமும் பாங்குடனே சீஷவர்க்கம் தானுரைப்பார்
அணியுடனே வையகத்தின் ஆசைதன்னை வன்புடனே யொழிப்பதுவும் மெத்தநன்று
துணிவுடனே வையகத்திலிருந்துமென்ன துப்புரவாய் தேகமதை யொழித்தேனென்று
பணிவுடனே சமாதிக்குப் போரேனென்று பண்பாகத் தாமுரைத்தார் சித்துதாமே

விளக்கவுரை :

[ads-post]

4463. சித்தான ஜெயமுனியார் ரிஷியார்தாமும் சிறப்புடனே வையகத்தைதான்மறந்து
முத்தான சமாதிக்குப்போரேனப்பா மூதுலகில் மறுபடியும் வருவதில்லை
பத்தான சீஷவர்க்கமானபேரே பாறைகொண்டு எந்தனையும் மூடவேண்டும்
சுத்தமுடன் சதாகாலம் பூசைவர்க்கம் சுடரொளியாந்தீபமதை வைக்கநன்றே

விளக்கவுரை :


4464. நன்றான சமாதியிலே பூசைமார்க்கம் நாடோறும் நடத்திவருங்காலந்தன்னில்
குன்றான தேவேந்தர் என்னைத்தானும் கொற்றவனார் ஜெயமுனியார் எங்கேபோனார்
பன்றான பரமகுருநாதர்தம்மின் பாதாரவிந்துமது யடைந்தாரென்றும்
வென்றிடவே யதிசயங்கள் மிகவுரைத்து மேதினியில் ஆசையது ஒழஇப்பீர்தாமே

விளக்கவுரை :


4465. வானான புலிப்பாணி மைந்தாகேளு தகமையுள்ள ஜெயமுனியார் சித்துதாமும்
பானான வையகத்தின் ஆசையற்று பரமகுரு நாதரது பாதஞ்சேர்ந்தார்
தேனான எனதையர் காலாங்கிநாதர் தேற்றமுடன் எந்தனுக்கு சொன்னநீதி
கோனான குருபரனார் ஜெயமுனியார்தாமும் குவலயத்தில் ஆசைதனை மறந்தார்பாரே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 4456 - 4460 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4456. ஏகவே செயமுனியார் சித்துதாமும் யெழிலான சமாதிக்குப்போகவென்று
சாகமுடன் திருபாலின் கடலோரந்தான் சட்டமுடன் சமாதிக்கு ஏகவென்று
நாகமுடன் சீஷவர்க்கக் கூட்டத்தோடு நலமுடனே சமாதிக்கு முன்னதாக
பாகமுடன் ஜெயமுனியார் சித்துதாமும் பட்சமுடன் சீஷரொடு சென்றிட்டாரே

விளக்கவுரை :


4457. சென்றாரே ஜெயமுனியார் சித்துதாமும் செழிப்பான சமாதியது தோண்டவென்று
நின்றதொரு சமாதியது தோண்டியல்லோ நிட்களமாய் கல்லாலே அறையுண்டாக்கி
வென்றிடவே கற்பாறைதானமைத்து விருப்பமுடன் சீஷவர்க்க மாண்பரோடு
கன்றாமல் ஜெயமுனியார் சித்துதாமும் காசினியை யான்மறந்து யேகினாரே 

விளக்கவுரை :

[ads-post]

4458. ஏகவே சமாதிக்கு செல்கவென்று எழிலான ஜெயமுனியார் சித்துதாமும்
பாகமுடன் சமாதிதனில் இறங்கியல்லோ பட்சமுடன் சீடருக்குக் கூறலுற்றார்
வேகமுடன் கற்பாறை மூடிப்போட விருப்பமுடன் சீஷவர்க்கமுரைத்தபோது
தோகமுடன் சீஷவர்க்கமெல்லாம்கூடி தோறாமல் பாறைதனை மூடிப்பாரே

விளக்கவுரை :


4459. மூடவே ஜெயமுனியார் சித்துதாமும் முனையான சமாதிதனிலிருந்துகொண்டு
நீடவே யசரீரிவாக்குதானும் நிட்களமாய் தானுரைத்தார் சீடருக்கு
கூடவே முப்பது வாண்டுமட்டும் குறையாமல் பூமிதனிலிருந்துகொண்டு
ஆடவே வையகத்தை யான்மறந்து அவனிதனில் வருவேனென்றுரைத்திட்டாரே

விளக்கவுரை :


4460. உரைத்துமே சிலகாலம் சென்றபின்பு ஓகோகோ நாதாக்கள் சித்துதம்மால்
திரைப்புடனே மறுபடியும் வருவேனென்று திட்டமுடன் ஜெயமுனியார் சொன்னவாக்கு
நிரைப்புடனே முப்பதுவாண்டுசென்று நேர்மையுடன் சீஷவர்க்கம் வந்துநிற்க
மரைப்பில்லா சித்துமுனிநாதர்தாமும் மார்க்கமுடன் சமாதிவிட்டு வந்திட்டாரே

விளக்கவுரை :


Powered by Blogger.