போகர் சப்தகாண்டம் 4466 - 4470 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 4466 - 4470 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4466. மறந்தாரே ஜெயமுனியார் சித்துதாமும் மகத்தான வையகத்தினாசையெல்லாம்
துறந்தாரே பதினாறு பிரமாவைத்தான் துப்புரவாய் யுகங்கடந்து சித்துதாமும்
திறமுடனே சகலகலையறிந்து மென்ன திக்கெங்கும் ஒருகுடையிலாண்டுமென்ன
அறமதுவும் வழுவாமல் செய்துமென்ன அவனிதனில் ஜெயமுனியும் மண்ணானாரே

விளக்கவுரை :


4467. மண்ணாகிப்போனாரே சித்துதாமும் மகத்தான வையகத்தின் ஆசையற்று
கண்ணபிரான் முதலானோர் மண்ணில்மாண்டார் காசினியில் யாரிருந்தார் வுலகுதன்னில்
வண்ணமுடன் சித்துமுனி ரிஷியார்தாமும் வளமுடனே யிப்படியே மாண்டாரல்லோ
எண்ணமது கொண்டல்லோ வுலகுதன்னில் எழிலான வாசையது வொழிந்திட்டாரே

விளக்கவுரை :

[ads-post]

4468. ஒழித்தாரே யிப்படியே அனேகசித்து வொப்புரவே கலியுகத்தினாசையெல்லாம்
வழிப்படவே யொழித்தவர்கள் கோடாகோடி வைகுண்ட பதவிதனையடைந்தார்கோடி
பழிதனக்கு இடங்கொடா வண்ணமாக பாருலகில் சடமொழித்தார் சித்துதாமும்
அழியாத சடலமது வழிந்துபோச்சு வப்பனே யுலகமதில் வொன்றுங்காணே

விளக்கவுரை :


4469. காணவே யிப்பெரிய சித்துதம்மை காசினியில் சித்தர்முனி யென்னலாகும்
தோணவே தவங்கிடந்த ரிஷியார்தம்மை தொல்லுலகில் தெய்வமென்று செப்பலாமோ
வேணபடி வையகத்து மாண்பரெல்லாம் விருப்பமுடன் இப்படியே மாய்ந்தாரல்லோ
நாணவே சித்தர்களின் வர்க்கமெல்லாம் நானஇலத்தில் இப்படியே பொய்வாழ்வாச்சே

விளக்கவுரை :


4470. ஆச்சப்பா புலிப்பாணி மைந்தாகேளு ஆரிருந்தார் வுலகுதன்னில் பொய்யேவாழ்வு
மாச்சலுடன் சமாதிக்குப் போவேனென்று மானிலத்தில் தவமழிந்து கெட்டார்கோடி
மூச்சடங்கி வாசியோகஞ் செய்தபேரும் மூதுலகிலிருந்தாரோ லக்கோயில்லை
ஏச்சான வுலகமெலாம் இப்படியேயாச்சு எழிலான மாயசித்தி கிரியைதானே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar