4461. வந்தாரே சித்துமுனி
ரிஷியார்தாமும் மார்க்கமுடன் வையகத்தைக்காணவென்று
சொந்தமுடன் சமாதிவிட்டு
வந்துமல்லோ தோற்றமுடன் சீஷவர்க்கம் காண்பதாச்சு
அந்தமுடன் சீடாதிசீடரெல்லாம்
வன்புடனே குருதனையே வாழ்த்திநின்று
சிந்தனைகள் மிகத்தீர்ந்து
குருவின்பாதம் சிறப்புடனே மாண்பரெல்லாம் பணிந்திட்டாரே
விளக்கவுரை :
4462. பணியவே சித்துமுனி
ரிஷியார்தாமும் பாங்குடனே சீஷவர்க்கம் தானுரைப்பார்
அணியுடனே வையகத்தின்
ஆசைதன்னை வன்புடனே யொழிப்பதுவும் மெத்தநன்று
துணிவுடனே
வையகத்திலிருந்துமென்ன துப்புரவாய் தேகமதை யொழித்தேனென்று
பணிவுடனே சமாதிக்குப்
போரேனென்று பண்பாகத் தாமுரைத்தார் சித்துதாமே
விளக்கவுரை :
[ads-post]
4463. சித்தான ஜெயமுனியார்
ரிஷியார்தாமும் சிறப்புடனே வையகத்தைதான்மறந்து
முத்தான
சமாதிக்குப்போரேனப்பா மூதுலகில் மறுபடியும் வருவதில்லை
பத்தான சீஷவர்க்கமானபேரே
பாறைகொண்டு எந்தனையும் மூடவேண்டும்
சுத்தமுடன் சதாகாலம்
பூசைவர்க்கம் சுடரொளியாந்தீபமதை வைக்கநன்றே
விளக்கவுரை :
4464. நன்றான சமாதியிலே பூசைமார்க்கம் நாடோறும் நடத்திவருங்காலந்தன்னில்
குன்றான தேவேந்தர் என்னைத்தானும்
கொற்றவனார் ஜெயமுனியார் எங்கேபோனார்
பன்றான பரமகுருநாதர்தம்மின்
பாதாரவிந்துமது யடைந்தாரென்றும்
வென்றிடவே யதிசயங்கள்
மிகவுரைத்து மேதினியில் ஆசையது ஒழஇப்பீர்தாமே
விளக்கவுரை :
4465. வானான புலிப்பாணி மைந்தாகேளு
தகமையுள்ள ஜெயமுனியார் சித்துதாமும்
பானான வையகத்தின் ஆசையற்று
பரமகுரு நாதரது பாதஞ்சேர்ந்தார்
தேனான எனதையர் காலாங்கிநாதர்
தேற்றமுடன் எந்தனுக்கு சொன்னநீதி
கோனான குருபரனார்
ஜெயமுனியார்தாமும் குவலயத்தில் ஆசைதனை மறந்தார்பாரே
விளக்கவுரை :