4471. தானான புலிப்பாணி மைந்தாகேளு
தண்மையுள்ள சீனபதிவிட்டுயானும்
கோனான எனதையர்காலாங்கிநாதர்
குருசொன்ன வாக்கினது பிரகாரந்தான்
தேனான குளிகையது
பூண்டுயானும் தேசமெலாம் சுத்தியல்லோ வருகும்போது
மானான வடகோடிகானகத்தில்
மார்க்கமுடன் மலையொன்று கண்டேன்பாரே
விளக்கவுரை :
4472. பாரேதான் வடகோடி கானகத்தில் பாங்கான திருப்பாலின் கடலின்பக்கல்
சீரேதான் மலையொன்று
குண்ணொன்றுண்டு சிறப்பான வசுவினியாம் பருவமப்பா
நேரேதான் மலைநாடு
நடுமையத்தில் நேர்மையுடன் குளிகையது கொண்டுமல்லோ
ஊரேதான் குடிகளில்லா
மலைகள்நாடு வுத்தமனே யானுமது இறங்கினேனே
விளக்கவுரை :
[ads-post]
4473. இறங்கியே மலைவளத்தைச்
சுற்றங்கண்டேன் எழிலான மலைசுத்திகானாறுண்டு
நிறம்வேறு ரிஷிமுனிவர்
அங்கேயுண்டு நேர்மையுடன் பச்சைவண்ண மாண்பரப்பா
திறமுடைய சீஷவர்க்கம்
சொல்லொண்ணாது தீர்க்கமுடன் வெகுபேரைக்கண்டேன்யானும்
உயமான மாணாக்கர் ஓடிவந்து
வுத்தமனே எந்தனையும் கண்டிட்டாரே
விளக்கவுரை :
4474. கண்டாரே சீஷவர்க்கமோடிவந்து
கடூரமுடன் எந்தனையும் யாரென்றார்கள்
விண்டதொரு
சீஷவர்க்கந்தன்னைப்பார்த்து வீரடங்கி மெய்நடுங்கி யடியேன்தானும்
தொண்டனைப்போல் அடிபணிந்து
முடிகள்சாய்த்து தொழுதிறங்கி மிகப்பணிந்து ஐயாவென்றேன்
அண்டர்முதல் தான்போற்றும்
காலாங்கிநாதர் அவருடைய சீஷனென்று வுரைத்திட்டேனே
விளக்கவுரை :
4475. அறைந்தேனே காலாங்கி
சீஷனென்றேன் அங்ஙனவே வார்த்தையது வுரைத்தபோது
குறைபேச வந்ததொரு
சீஷவர்க்கம் குறிப்புடனே எந்தனையும் பார்த்தபோது
முறைபேசி கதைபேசி வுறவுபேசி
மூதுலகில் சித்துமகாரிஷிநினைந்து
திறமையுடன் அஞ்சலிகள்
மிகவுஞ்செய்து தீர்க்கமுடன் ஆசீர்மஞ் செய்திட்டாரே
விளக்கவுரை :